தான்சானியாவில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்கும் நோக்கில் 200 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தான்சானியாவில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருகின்றன.
கடந்த 2000ம் ஆண்டு தொடக்கத்தில் குறைந்தபட்சமாக வெள்ளை நிற தோலுடைய 76 பேர், தான்சானியாவில் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
மேலும் அதிர்ஷ்டமும், செல்வமும் வரும் என்ற நம்பிக்கையில், இதுபோல் கொல்லப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை பாரம்பரிய நாட்டு மாந்தீரக மருத்துவர்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே வெள்ளை நிறமுடையவர்கள் தாக்கப்படும் சந்தர்ப்பத்தில் அபாய அறிவிப்பு மணி ஒலிக்கக் கூடிய கருவிகளை அவர்களிடம் பொலிசார் அளித்துள்ளனர்.
மேலும் இத்தகைய கொலைகள் தமது தேசத்திற்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜகாயா கிக்வேட்டே(Jakaya Kikwete) வருத்தம் தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com




























இது வெள்ளை நிற குழந்தையா? அல்லது வெள்ளைக்காரனுக்கு பிறந்த குழந்தையா? தப்பு இல்லையா?