சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னதாகவே வெளியிடவிருப்பதாக, மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முன்வைத்த உறுதிமொழிகளின் அடிப்படையில் ஒருமுறை மாத்திடம் இந்த அறிக்கை பிற்போடப்பட்டது.
எனினும் செப்டம்பர் மாதம் மீண்டும் அதனை பிற்போடுமாறு கோரப்பட்டால், தாம் அதற்கு இணங்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை செப்டம்பர் மாத மாநாடு ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-http://www.pathivu.com