செவ்வாய் மீனவர்கள் பேச்சுவார்த்தை! நேற்றிரவு 54 பேர் சிறைபிடிப்பு!!

indian_fishermen_arrestedஇலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த, தமிழக மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். வடக்கு தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு ஆகிய கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னாரில் ஜந்து படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 33 மீனவர்களும் அதே போன்று நெடுந்தீவில் ஜந்து படகுகளில் மீன்பிடியினில் ஈடுபட்டிருந்த 21 இந்திய மீனவர்களுமே கைதாகியுள்ளனர்.

எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள இலங்கை – இந்திய மீனவ சங்கங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் இலங்கையிலிருந்து 19 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மீனவ சங்கங்களின் தலைவர்கள் 10 பேரும் அதிகாரிகள் 9 பேரும் இந்த குழுவில் அடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்கு நீரிணை பிராந்தியத்தில் மீன்பிடித்தல் மற்றும் மீன்பிடி பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை – இந்திய மீனவர் சங்கங்கள் சந்தித்து மூன்றாவது தடவையாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

இதனிடையே எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள இலங்கை – இந்திய மீனவ சங்கங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் இலங்கையிலிருந்து 19 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர். மீனவ சங்கங்களின் தலைவர்கள் 10 பேரும் அதிகாரிகள் 9 பேரும் இந்த குழுவில் அடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக்கு நீரிணை பிராந்தியத்தில் மீன்பிடித்தல் மற்றும் மீன்பிடி பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை – இந்திய மீனவர் சங்கங்கள் சந்தித்து மூன்றாவது தடவையாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

-http://www.pathivu.com

TAGS: