ஐ.நாவில் குழுமியிருந்தோரை கண்கலங்க வைத்த இயக்குனர் கௌதமன்

un_womens_009ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் “OCAPROCE INTERNATIONAL” என்ற அமைப்பின் சார்பாக மாநாடு ஒன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

இம்மாநாடு OCAPROCE INTERNATIONAL அமைப்பின் தலைவி தலைமையில் இடம்பெற்றதுடன், இதில் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளரான செல்லத்துரை ரஜனி அவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் தமிழ் நாட்டில் இருந்து பேராசிரியர் இராமு.மணிவண்ணன், உயர் நீதிமன்ற சட்டத்தரணி திருமதி.அங்கயக்கண்ணி, செல்வி உமாசங்கரி நெடுமாறன் ஆகியோர் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பான விபரணம் செய்தனர்.

ஐ.நா மண்டபத்தில் தமிழ் இன அழிப்பு தொடர்பான ஆவணப் படமொன்றும் திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தினை தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குனர் கௌதமன் அவர்கள் இயக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் பங்கு பற்றிய அதிகமான தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கியமையை காணக் கூடியதாக இருந்தது.

-http://www.tamilcnnlk.com

un_womens_001

un_womens_002

un_womens_003

un_womens_004

un_womens_005

un_womens_006

un_womens_007

un_womens_008

un_womens_009

un_womens_010

un_womens_011

un_womens_012

un_womens_013

un_womens_016

un_womens_017

un_womens_018

un_womens_019

un_womens_020

un_womens_021

un_womens_022

TAGS: