புதிய அரசாங்கம் தங்களின் நிலையைத் தக்கவைப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி பெரும்பான்மை மக்கள் மத்தியில் தனித்துவத்தைக் காட்டி இனவாத கருத்துக்களை வெளியிட்டு அரசியல் செய்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிறுபான்மைக் கட்சிகளுக்கு எந்த வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் அல்லது மாற்றாமல் விகிதாசார தேர்தல் முறையில் நடார்த்த வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.
செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கல்லூரி முதல்வர் க.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கோட்டக் கல்வி அதிகாரி பொ.சிவகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“எமது நாட்டிலே வடக்கு கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்புடன் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதியின் மீது கொண்ட பாசத்தினால் நாங்கள் வாக்களிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவே நாங்கள் வாக்களித்தோம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் கிடைத்துள்ளதா என்ற கேள்வி எல்லோரது மனதிலுமுள்ளது. புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்திலே இன்றும் ஒரு மாதம் மாத்திரமே எஞ்சியுள்ளது. இந்த ஒரு மாத காலத்திற்குள் இன்னுமொரு தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள்; தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வைப் பெற்றுத்தருகின்ற நோக்கமோ அல்லது பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு இருக்க கூடிய நல்ல விடயங்களை வெளிக்காட்டக் கூடிய மனோநிலையற்றவர்களாகவே செயற்பட்டுக் கொண்டிருகிறார்கள்.
சுமார் 500 இளைஞர்கள் சிறையிலே வாடிக் கொண்டிருகிறார்கள். அவர்களை நல்லெண்ணத்துகுக்காக விடுதலை செய்ய வேண்டியை தேவையை நாங்கள் எதிர்பார்த்திருந்தும் ஜனாதிபதியோ பிரதமரோ இதைபற்றி கரிசனை செலுத்தாமல் காலத்தை அழுத்தடித்துக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பார்க்கின்ற போது அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்காக ஜனாதிபதியும் பிரதமரும் தங்களைத் தக்கவைப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை பகடைக்காய்களாக, காட்சிப் பொருட்களாக அல்லது பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு அவர்களிக் தனித்துவத்தைக் காட்டி இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு அரசியல் பணி செய்வதை நாங்கள் முழுமையாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது உறவுகள் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நாட்டிற்கு வருமாறு என புதிய அரசாங்கள் அழைப்பு விடுகிறது. அவர்கள் உதட்டளவில் அவ்வாறு கூறிவிட்டு வருகின்ற போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கடத்தப்படுவதும் தடுத்து வைப்பதுமான சூழ்நிலை தொடர்ந்தும் காணப்படுகிறது. நிலையில் எவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இங்கு சுதந்திரமாக வர முடியும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.
அடுத்த மாதம் 23ஆந் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய சூழல் காணப்படும் நிலையில் பாராளுமன்றத்தைக் கலைக்காது புதிய முறையில் தேர்தல் நடார்த்த வேண்டும் என ஜானாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என பிரதமரின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் தங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பாராளுமன்ற முறையை மாற்றுகின்ற போது சிறுபாண்மைக் கட்சிகளுக்கு பாதிப்புகள் ஏற்படவுள்ளது என்பதை நாங்கள் உணருகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்த வரை சிறுபான்மைக் கட்சிகளுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் அல்லது மாற்றாமல் விகிதாசார தேர்தல் முறையில் நடார்த்த வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடாக காணப்படுகிறது” என்றார்.
-http://www.tamilcnnlk.com