2009 போருக்கு பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போருக்கு பின்னரான 5 வருடங்களில் அந்த நல்லிணக்கத்தை அரசாங்கத்தினால் எட்டமுடியவில்லை.
எனினும் அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு புதிய அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது என்று அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளுக்கான உதவிச்செயலாளர் டொம் மாலினொவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவர் உலகில் இன்று பலதரப்பட்டநிலையில் பயங்கரவாதம் நிலவுகிறது.
மக்களை காப்பாற்றுவதாக கூறி இந்த பயங்கரவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இந்த பயங்கரவாத செயல்களால் மக்களை காப்பாற்ற முடியாது.
எல்லாத் தரப்பும் பிழைகளுக்கான பொறுப்பை ஏற்று செல்லும் போது இனங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் நல்லிணக்கத் திட்டங்களுக்கு உதவத் தயார் என்றும் அமெரிக்க அதிகாரி உறுதியளித்துள்ளார்.
-http://www.tamilwin.com