இலங்கையில் ஏற்பட்ட அநீதிகளுக்கு காரணங்களை கண்டறிந்து, அதற்கு பரிகாரம் காணத் தயார் என்று இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உறுதியளித்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
இலங்கையின் பல்கலாச்சார, பல்லின அடிப்படையில் அனைவருக்கும் நீதிகிடைக்க அரசாங்கம் தீவிரமாக செயற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை- ஐரோப்பிய ஒன்றிய 19வது அமர்வு நேற்று வெளியுறவு அமைச்சில் இடம்பெற்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
வடக்குகிழக்கில் ஏற்கனவே 425 ஏக்கர் காணி சொந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசியகீதம் தமிழ்மொழியில் பாட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னைய அரசாங்கத்தினால் செய்யமுடியாதுபோன நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார்.
விடுதலைப்புலிகளின் தடையை நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பையும் அவர் வரவேற்றார்.
இதன்போது ஐரோப்பிய ஒன்றியக்குழுவுக்கு ஒன்றியத்தின் ஆசிய பசுபிக் வலய வெளியுறவு சேவை பதில் பணிப்பாளர் உகு ஒஸ்டுடு தலைமை தாங்கினார்.
-http://www.tamilwin.com