புதிய அரசானது தொப்புள்கொடி உறவான தமிழக மீனவர்களையும் எமது மீனவர்களையும் மோத வைக்கும் சதிமுயற்சியினில் ஈடுபட்டுள்ளது.இதில் நாம் விழிப்பாக இருக்கவேண்டும். ஆட்சி மாறிவிட்டது காட்சி மாறி விட்டது என்று வெளிநாடுகளுக்கு காண்பிக்கப்படுகின்றது .ஆனால் இங்கு ஏதும் மாறவில்லை இது தான் உண்மையென அம்பலப்படுத்தியுள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்.
நேற்றைய அமர்வில் உரையாற்றுகையில் குறிப்பாக இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக வடக்கு மாகாண சபை என்ன நிலைப்பாட்டில் உள்ளதென்பதை பேசி பேசி முடிவெடுக்கப்படவேண்டும். ஏறத்தாள 700 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை துடிக்க துடிக்க சுட்டு கொன்று குவித்துள்ளது. ஈழத்தமிழ் மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் மோத விட்டு எம்மை சதி வலையில் சிக்க வைக்க முனைகிறது இலங்கை அரசு.
எனவே நாங்கள் அந்த சதி வலையில் ஒரு போதும் சிக்கி விட கூடாது அதற்காக நாங்கள் எமது கடல் வளத்தையோ வாழ்வாதாரத்தையோ அடகு வைக்க முடியாது.இதனை பேசி தீர்க்க வேண்டும் .
புதிய அரசின் நாடகத்தை வெளிஉலகத்துக்கு காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
-http://www.pathivu.com