தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரவில்லை. ஆனால் சபாநாயகர் சம்பந்தனை அழைத்துப் பேசியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக எழும்பியுள்ள சர்ச்சை குறித்து லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யார் எதிர்க்கட்சித் தலைவராக வரப்போகிறார்கள் என்பதில் இராஜதந்திரிகள் பலர் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் சபாநாயகர் தன்னுடைய இராஜதந்திரத்தின் பிரகாரம் பிரச்சினைகளை உருவாக்காமல் இதனை விடுவதற்கு யோசித்திருக்கலாம்.
ஏனென்றால் சபாநாயகர் தொடர்பாக அவருடைய பதில் ஆரோக்கியமானதாக அமையவில்லை என சுரேஸ் எம்.பி தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=3FGyN4Ta1TQ