பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் தாக்குதல்கள் நிற்பதாகத் தெரியவில்லை. இப்போது அவர் நஜிப் ஆதரவாளர்களை நோக்கிக் கணைகளைப் பாய்ச்சியுள்ளார்.
மகாதிர் தம் வலைப்பதிவில், நஜிப் ஆதரவாளர்களை நோக்கி அம்னோ தலைவரின் உருவாக்கமான 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) ரிம42 பில்லியன் கடன் பட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார்களா என்று வினவியுள்ளார்.
நஜிப் தம் முன்வைக்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கக் காணோம். ஆனால், நஜிப்புக்கு அம்னோ தொகுதிகளும் பிஎன்னும் மஇகாவும் செனட்டர்களும் பல்வேறு தரப்புகளும் ஆதரவு தெரிவிப்பதைத்தான் பார்க்கிறோம்.
“என்னை ஆதரிக்கச் சொல்லி நான் யாரையும் கேட்கவில்லை. ஆனால், நஜிப்பை ஆதரிப்பவர்களிடம் அவர்கள் அவரது 1எம்டிபியை, அதாவது 1எம்டிபி ரிம42 பில்லியன் கடன் வாங்கி இருப்பதையும் வான்கிய பணம் எங்கே என்றால் அவரால் பதில் சொல்ல முடியாமல் இருப்பதையும் ஆதரிக்கிறார்களா என்று கேட்க விரும்புகிறேன்”, என்றவர் கூறினார்.
அல்தாந்துயா நஜிப் எதை சொன்னாலும், எதை செய்தாலும், அதை கண்மூடித்தனமாக ஆதரிப்பதே, அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம். அதைவிடுத்து வேறு எதையும் கேட்டு விடாதேள். பதில் சொல்ல வராது போங்கோ!
“கையிலே வாங்கனன் பையிலே போடல காசு போன இடம் தெரியுல”. இந்தப் பாட்டை அம்நோகாரர்களுக்கு போட்டுக் காட்டுங்கோ மாமக்தீர் அவர்களே.
பணம் எங்கே இருக்கு என்று எப்படி ஒப்புக்கொள்வார்,50%சுவிஸ்ல,50% ?
என்பார்,
எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்??/ சொகுசு ஜெட் விமானத்தில் மாட்டிக் கொண்டாயோ, நியூ யார்க் சொகுசு அடுக்கு மாடி வீட்டில் மாட்டிக் கொண்டாயோ, சிகை அலங்காரத்தில் ஒளிந்து கொண்டாயோ, சுவிஸ் வங்கியில் புதைந்து கொண்டாயோ, எங்கே தேடுவேன் 1MDB பணத்தை எங்கே தேடுவேன்??
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன் ! ம.இ.கா , தலைவர்கள் கையில் மாட்டிக்கொண்டாயோ !! அவர்கள் திறந்த அரவாரியத்தில் புகுந்து கொண்டாயோ !!! எம்ஸ்ட் பல்கலைகழகத்தில் ஒளிந்துகொண்டாயோ ? இல்லை mied யாக மாரிப்போனாயோ!!!