ஆந்திராவில் எமது தொப்புள்கொடி உறவுகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதும் அத்தோடு படுகொலையின் தொடர்பாக வெளிவந்த புகைப்படங்களும் உலகத் தமிழர்களின் உள்ளங்களை உலுப்பி உள்ளது . இப் படுகொலை என்பது மனிதநேயமற்ற , கொடூரமான , இரக்கமற்ற செயலாகவே பார்க்கவேண்டும் .
இப்படுகொலைக்கு நீதியான விசாரணை நடாத்தப்பட்டு , குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வலியுறுத்துவதோடு, மேலும் உயிர்களை நாம் இழக்கும் நிலை உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கின்றது .
ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அனைத்து தமிழக தொப்புள் கொடி உறவுகளோடும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தனது கரங்களை தோழமையுடன் இணைத்துக் கொள்கிறது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை.
-http://www.pathivu.com
சபாஸ் இதுதான் தமிழன் ஒற்றுமை.. வாழ்க தமிழ் இனம்
தமிழன் , அவன் சொந்த நாட்டிலேயே கொல்லப்படுகிறான் , இதில் எங்கே வெளியில் இருக்கும் நமக்கு உதவுவது? அதனால் , முதலில் அவன் சொந்த நாட்டில் சாகாமல் உயிர் வாழ கற்ருக்கொள்ளட்டும் !
இந்தியா தமிழர்களின் நிலையை தொடர்ந்து புறக்கணித்தால், தமிழர்கள் இந்தியாவை புறக்கணிக்க ஆரம்பித்து விடுவர் என்பதை காலந்தான் முடிவு செய்யும்.