மாவீரர் துயிலுமில்லங்கள் அழிப்பு தமிழ்மக்களின் கோபத்தை தூண்டுவதாக உள்ளது!!!

கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சிலோன் ருடே’ நாளிதழில், ‘சுலோச்சனா ராமையா மோகன்’ துயிலுமில்லங்களின் அழிப்பு தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை.“என்  சகோதரன் இறந்துவிட்டார். ஆனால் புதைகுழியை அழிப்பதன் மூலம் அவருடைய நினைவுகளை ஒருபோதும் அழிக்க முடியாது. ஒரு இராணுவ முகாமின் கீழேயே எனது சகோதரனின் புதைக்கப்பட்ட உடல் உள்ளமை மிகவும்  வலி நிறைந்த சம்பவமாகும்’

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் உயிர்நீத்த பின்னர் அவர்கள் துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டார்கள். இந்த இல்லங்களை மக்கள் அனைவரும் நேசித்தனர்.சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் புலிகளின் உயிர்நீத்த போராளிகள் புதைக்கப்பட்ட துயிலுமில்லங்கள் சிறிலங்கா இராணுவத்தால் அழிக்கப்பட்டன.

ஆனால் இன்றோ யாழ்ப்பாணத்தில் துயிலும் இல்லங்கள் எங்கும் காண கிடைக்கவில்லை. அவைகள் இப்போழுது இராணுவ முகாம்களாகவே காட்சியளிகின்றன.

அங்கு 25 துயிலும் இல்லங்கள் இருந்தன, அதில் ஒவ்வொரு வீரச்சாவடைந்த விடுதலை புலிகளுக்கு  அவர்களின் நினைவுவேந்துவதற்கு நினைவிடமும் அதில் அவர்களின் குறிப்புகளோடு கல்வெட்டும் அமைக்கபட்டிருந்தது.

இப்பொழுது அந்த கல்வெட்டுகளும் நினைவிடங்களும் எங்கே?

இவைகள் எந்த காரணத்தை கொண்டு அழிக்கப்பட்டன?

அழிக்கப்பட்டு இராணுவ முகாம்களாகவும், காவல் நிலையங்களாகவும் அங்கு ஏன் ஏற்படுத்தப்பட்டன?

இதற்க்கு பாதுகாப்பு படையினர் கூறிய பதில்

இதுவொரு   அருவருக்த்தக்க யுத்தம்.தமிழீழ தனி நாட்டிற்காக போராடியவர்கள் எவரும் யார் நினைவிலும்  இருக்ககூடாது என்றும், அதில் சில துயிலும் இல்லங்கள் நகரத்துக்குள் இருந்ததாலும் அதை இடித்து அழித்தோம் என்றும்  கூறியிருக்கின்றனர்.

ஆனால் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்கோ பாதுகாப்பு படையின் இந்த மோசமான செயலால்உளவியல் ரீதியான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

தங்கள் குடும்பத்தில் ஒருவரின் நினைவிடத்தை இராணுவம் அழித்ததில் மக்களுக்கு கோபத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு நேர்மாறாக, விடுதலை புலிகள் இருந்த காலங்களில் வீர சாவடைந்த மாவீரகளை நினைவு கூற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து மக்களும், உறவினர்களும் நினைவிடத்திற்கு வந்து மாவீரர் நாளன்று நவம்பர் 27 திகதியை, 1980 களில் இருந்தே அனுசரித்து வருகின்றனர்.

விடுதலை புலிகள் இயக்கம், அங்கிகரிக்கப்பட்ட  ஒரு நாட்டுடைய இராணுவம் போலவே இயங்கி வந்தனர். அதனாலையே துயிலும் இல்லங்களை, வீர சாவடைந்த மாவீரர்களுக்கு மரியாதைகொடுக்கும் விதமாக ஒழுங்காகவும், நேர்த்தியாகவும் மேற்கத்திய பாணியில் அமைத்திருந்தனர்.

விடுதலை புலிகள் அமைப்பில் நினைவிடங்கள் அமைக்க பளிங்குக் கற்கள், சீமெந்துக் கற்கள் மற்றும் கருங்கற்களால் போன்ற கற்களை, கையால் செதிக்கியும் வீர சாவடைந்த போராளிகளின் படங்கள் கண்ணாடிகளால் உறையிடப்பட்டும் நினைவிடங்களில் வைத்திருந்தனர்.

அதனாலையே வீர சாவடைந்த குடும்பத்தினருக்கு விடுதலை புலிகளின் மீது பெரும் மரியாதை  இருந்தது.

இந்துகளின் வழக்கப்படி இறந்தவர்களை எரிப்பதே மரபு. ஆனால் விடுதலை புலிகள் தம்முடைய வீர சாவடைந்த வேங்கைகளை புதைப்பதயே வழக்கமாக வைத்திருந்தனர்.

அதற்க்கு அவர்கள் கூறும் காரணம் அப்பொழுதுதான் அவர்களின் மறைவை நினைவு கூறவும், மரியாதை செலுத்தவும் உகந்தவழியாக இருக்கும் என்பதே அதற்கு காரணம்.

இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கையால் போராளிகளின் குடும்பங்கள், துயிலும் இல்லங்கள் இருந்த இடத்தில் உள்ள இராணுவ முகாம்களை பார்க்கும்போது வெறுப்புடனும், கோபத்துடனும் பார்க்கின்றனர்.

இயக்கம் இருந்த காலங்களில் அவர்களுடைய உறவினர்கள் துயிலும் இல்லங்களுக்கு தங்களின் உறவுகளை நினைவு கூறவும், தங்களின் வலியை அழுகை மூலமாக வெளிபடுத்த ஒரு இடம் இருந்ததை நினைகின்றனர்.

ஆனால் இன்று அது கூட இல்லை என்பது அவர்களுக்கு பெரும் வலியாகவே இருக்கிறது.

வருடா வருடம் மாவீரர் தினத்தன்று வீர சாவடைந்த வீரர்களின் அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் விளக்கேற்றி, மாலை போட்டு தங்களின் நினைவுகளை ஏந்துவர். மாவீரர் நாள் என்பது இயக்கத்தின் முதல் வீர சாவடைந்த வீரர் லெப்ரினன்ட் சங்கர் (சத்தியநாதன் அல்லது சுரேஸ்) நவம்பர் 27, 1982ல் உயிர்நீத்திருந்தார். இவர் உயிர் நீத்த நவம்பர் 27 மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

ஒரு உண்மை சம்பவம்   பெயர் தெரியாத ஒருவரால் கூறப்பட்டது:

ஒரு அம்மா நெடுந்தூரத்தில் இருந்து தன் மகனை காண துயிலும் இல்லத்திற்கு ஓடோடி வந்தார், அதை பார்க்கும் பொழுது எனக்கு அவருடைய பிள்ளை அவருக்காக காத்திருப்பது போல் இருந்தது. மாவீரர் தினத்தன்று வீர சாவடைந்த தன் சொந்தங்களை பார்க்கவரும் குடும்பங்கள் இப்பொழுது எங்கே போகும். எங்களின்களின் மனித உணர்வுகள் இங்கு மதிக்கப்படவில்லை, ஏன்  எங்களுக்கு இந்த நிலைமை.

யாருமே இறந்தவர்களை மறக்க இயலாது, அவர்களின் நினைவிடத்தை அழிப்பது மிகபெரிய மனித உரிமை மீறல்.

என்ர அண்ணையும் ஒரு மனிதன் தான், அவனுக்கு ஒரு காரணம் இருந்து இயக்கத்தில் சேர்வதற்கு.

இயக்கத்தில் இருந்ததால்  அவரை தீவிரவாதி என்று அரசு கூறியது. தீவிரவாதி என்றாலும் மனிதன்தானே. அவர் இபோழுது இல்லை, அவர் வீர சாவடைந்துவிட்டார். நினைவிடத்தை அழித்துவிட்டால் நினைவுகளை அழிக்க முடியாது. போர் முடிந்த சூழலில் அங்கு இராணுவ முகாம் வைத்துள்ளனர், ஏன் அங்கு ஒரு தாவர பூங்கா வைத்திருக்கலாம் இல்லையா?

என் அண்ணை இறந்துவிட்டார், ஒரு நினைவிடம் இருந்தால் அங்கு நாங்கள் சென்று நினைவேந்துவோம். அவர் வீர சாவடைந்து புதைக்கபட்டுவிட்டார், அவர் என்ன செய்ய போறார் உங்களை?

கோப்பாயில் உள்ள ஒரு பெண் கூறுகையில்:

தன்னுடைய மகனை நினைவு  கூறும் போது. என்னுடைய மகன் கோப்பாயில் உள்ள துயிலும் இல்லத்தில் விதைக்கபட்டுள்ளர்.

இணையத்தில்  புலிகளை பற்றிய காணொளியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 25 துயிலும் இல்லங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதில் திருகோணமலையில்  உள்ள ஆலங்குள பகுதி துயிலுமில்லத்தில் 147 கல்லறைகளும், 137 நினைவுக்கற்களும், வவுனியா – ஈச்சங்குளம் துயிலுமில்லத்தில் 192 கல்லறைகளும் 315 நினைவுக்கற்களும், காணப்பட்டன.

மேலும் யாழ்ப்பாணத்தில் கோப்பாய் என்னும் இடத்தில்  40 ஏக்கர் நிலப்பரப்பில் துயிலும் இல்லம் நிறுவப்பட்டிருந்தது.

கோப்பாய் துயிலும் இல்லத்தில் 168 வீர சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை விதைத்துள்ளனர் ,  1148 போராளிகளுக்கு  நினைவுக்கற்களும் நிறுவியுள்ளனர், கொடிகாமத்தில் 463  வீர சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை விதைத்துள்ளனர்,  505 போராளிகளுக்கு   நினைவுக்கற்களும் நிறுவியுள்ளனர் , எள்ளங்குளம் பகுதியில் 309  வீர சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை விதைத்துள்ளனர் ,  486 போராளிகளுக்கு நினைவுக்கற்களும் நிறுவியுள்ளனர், சாட்டி  பகுதியில் 4 வீர சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை விதைத்துள்ளனர், 150 நினைவுக்கற்களும் நிறுவியுள்ளனர், தீருவில் பகுதியில் விடுதலை புலிகளின் வீர சாவடைந்த  மூத்த போராளிகளை அடக்கம் செய்துள்ளனர். இப்பொழுது அந்த தீருவில் பகுதி விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டுள்ளது.

திருவில் நினைவுச்சின்னம்:

1987 ல் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை பகுதிகளில் இருந்து குமரப்பா, புலேந்திரன் மற்றும் 1௦ புலி வீரர்களை இலங்கையை சேர்ந்த கடற்படை கைது செய்தனர்.

தண்ணீர் பகிர்தளிப்பு ஒப்பந்தத்தை மீறியற்காக அவர்களை கைது செய்தனர். இவர்கள் இந்திய அமைதிப்படை வசம் இருக்கும் பொழுது  குப்பிகளை கடித்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்களின் உடல் எரிக்கப்பட்ட காரணத்தால் அவர்களுக்கு நினைவிடம் அமைக்க முடியவில்லை. அதனால் தான் அவர்களுக்கு தீருவில் பகுதியில் நினைவு சின்னங்கள் வைக்கப்பட்டன.

1993 ல் மூத்த போராளி  கேணல் கிட்டு லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பொழுது இந்திய கடல்படையினர் இடைமறிக்கும் நேரத்தில் , கேணல் கிட்டு ,மலரவன், 4 தளபதிகள் மற்றும் 3 போராளிகள்  தங்களை வெடித்து வீர சாவடைந்தனர். தீருவில் துயிலுமில்லத்தில்  இவர்களுக்கும்  நினைவு சின்னங்கள் வைக்கப்பட்டன.

சிலோன் டுடே பத்திரிகை திருவில் பகுதியில் செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு வந்த ஒருவர், நீங்கள் பார்ப்பது வெறும் கற்கள் தான், அவர்கள் என்றும் எங்கள் நினைவில் வாழும் மனிதர்கள் என்று கூறினார். எல்லா துயிலும் இல்லங்களும் இராணுவ முகாம்களாக மாறிவிட்டன, எந்த ஊடகமும் இந்த செய்தியை பெரிது படுத்தவில்லை என்றும் கூறினார்.

விடுதலை புலிகளின் கோப்பாய் மற்றும் சாட்டியில் உள்ள துயிலும் இல்லங்கள் 1995 லும் , கொடிகாமத்தில் உள்ள தென்மராட்சி 1996லும் மற்றும் வடமராட்சி, எள்ளங்குளம்  துயிலுமில்லம் 1996 லும் அழிக்கப்பட்டன..

இந்த துயிலும் இல்லங்கள் 2002 ல் அமைதி காலகட்டத்தில் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. இந்த செய்தி ஒரு தமிழ் ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 40000 விடுதலை புலிகளின் போராளிகள் வவுனியா பகுதியில் உள்ள விசுவமடு  என்ற பகுதியில் புதைக்கப்பட்டனர்.

இந்த நினைவுச்சின்னங்களை அழிப்பதினால் பழைய வன்முறைகளும், வன்மங்களும் தமிழ் மக்கள் மறந்துவிடுவர் என்று இராணுவம் நினைக்கிறது.

ஆனால் இத்தகைய செயல் அவர்கள் கோபத்தை தூண்டுவதாக உள்ளது. ஆனால் அந்த மக்களால் அந்த கோபத்தை பயத்தினால் வெளிபடுத்த முடியாதநிலையில் உள்ளனர்.

டாக்டர். ஐவோர் ஜென்கின்ஸ் , இவர் தென் ஆப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிராக போராடியவர். அவர் சிலோன் டுடே வுக்கு கூறுகையில் “ஒரு சிறிய போராடும் வாழ்வையும் சிறுபான்மை அமைப்பு பெரிய அரசியல் கட்டமைப்பை தீவிரமாக இடையூறும் செய்ய முடியும்,நிலைகுலைய  செய்யவும் முடியும்”. போர் முடிந்த சுழ்நிலையில் இலங்கையில் பெருபான்மையான மக்கள் மென்மையான சூழலில் வாழ்வதாக நினைத்தாலும், இது தமிழர்களின் மனதை வென்றதா? அது இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது.

-பதிவு இணையத்திற்காக
மொழியாக்கம் – பிரதீப் குமார்

-http://www.pathivu.com

TAGS: