தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை உடைக்க ரணில் வியூகம்? அதிர்கின்றது வடக்கு!!

ranil_wickramasingheவட-கிழக்கு தமிழர் தாயகத்தில் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை முடக்க ரணில் அரசு சதி முயற்சிகளை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது. அத்துடன் அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியினையும் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:-

இலங்கைப் புலனாய்வுக் கட்டமைப்பின் அதிகாரி மட்டத்தில் முகமட் எனும் பேரில் நபர் ஒருவர் தற்போது களமிறக்கப்பட்டுள்ளார். அந்நபர் முன்னணி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து மூளைச்சலவை செய்துவருவதாக தெரியவருகின்றது. எனினும் அவர் உண்மைப் பெயர் மற்றும் பதவி நிலை பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.

குறிப்பிடத்தக்க சில மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென இலக்கு வைத்துள்ள அந்நபர் அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அண்மையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியில் இரகசியமாக புதிய ஆளுநர் பாளிகக்காரவை சந்தித்துள்ளதாகவும் அதற்கும் குறித்த முகமட் எனும் நபரே ஏற்பாடுகளை செய்து வழங்கியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்தில் வைத்து சில அமைச்சர்களை சந்திக்கவும் ஏற்பாடுகளை செய்து வழங்கியமையும் அம்பலமாகியுள்ளது.

மக்களிற்கான உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறியே இவ்வாறு அரச உயர்மட்டங்களுடன் உறவை பேண வழிவகுக்கப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இத்தகைய நெருக்கமான தொடர்பாடல்களையடுத்து காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட மக்களது பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்துவதை இந்நபர் தடுத்துவருவதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புக்களையும் இத்தகைய தரப்புக்களினை கொண்டு தடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பாக அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் வட-கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கணிசமான வாக்குகளை திரட்டுமென புலனாய்வு அறிக்கைகள் அரசிற்கு அறிக்கையிட்டுள்ளன.

கூட்டமைப்பின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது வாக்குவங்கியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இந்நிலையில் கடும் போக்கு அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அபரிதமான வளர்ச்சி இலங்கை அரசிற்கு அப்பால் இந்தியாவையும் கவனத்தை செலுத்த வைத்துள்ளது.

இந்நிலையில் கூட்டமைப்பிலுள்ள கடும் போக்கு செயற்பாட்டாளர்களை கைக்குள் போட்டு அதன் தலைமையினை தக்க வைக்கவே இம்முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென தனது இரகசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நபர் யாழில் கொக்குவிலிலுள்ள படைத்தளமொன்றில் தங்கியுள்ளதுடன் தனது சொகுசு வாகனத்தில் திரிந்தே செயற்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நபரது நடவடிக்கைகள் தமிழ் தேசிய நிலைப்பாடுடைய ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியினை தோற்றுவித்துள்ளது.

-http://www.pathivu.com

TAGS: