1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை, இந்தியஒப்ந்தங்களின் மூலம் தமிழர்களாகிய நாம் பலவற்றை இழந்திருக்கின்றார்கள் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். எருவில் கண்ணகி விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களும் இணைந்து சித்திரை புத்தாண்டு விளையாட்டு நேற்று கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இவ் விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,
65 வருடகாலமாக தந்தை செல்வா அகிம்சை வழிநின்று போராடி அதற்குப்பின் அவர் கூறிய கருத்துப்படி அகிம்சை வழியில் எமக்கு தீர்வு கிடைக்காமல் போனால் எமது எதிர்கால இளைஞர்கள் அடுத்த போராட்டத்தினை ஆயுத ரீதியாக போராடித்தான் பெறமுடியும் என்று கூறியதற்கு இணங்க அவருக்கு அடுத்ததாக தலைவர் பிரபாகரன் அந்த போராட்டத்தினை கையில் எடுத்தார். அதுவும் பன்னாட்டு படைகளின் சூழ்ச்சி காரணமாக ஆயுத போராட்டம்மௌனிக்கப்பட்டதன் பின்னர் இன்று எமது பெரும் தலைவர் சம்பந்தன் தற்போதைய போராட்டத்தினை கையில் எடுத்து பயணித்துக்கொண்டிருக்கின்றார்.
இவர்களது அனைவரது போராட்டத்திலும் ஒரு முக்கிய கருத்து பொதிந்து காணப்பட்டது. தமிழர்கள் தமிழர்களாக இந்த நாட்டிலே அனைத்து சுதந்திரமும் பெற்று வாழவேண்டும் என்பதுதான். தலைவர் சம்பந்தன் காலத்தில் எமது மக்களுக்கான இறுதித்தீர்வினை பெற்று வாழவேண்டும் என்பதற்காக த.தே.கூட்டமைப்பில் உள்ள அனைவரும் அயராது இராஜதந்திர ரீதியாக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.
சமூகத்திற்கும், கல்விக்கும், அரசியலுக்கும் இடையோ பாரிய இணக்கம் இருக்கின்றது. அதனை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். இன்று 19 வது அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது பல சர்ச்சைகளை பாராளுமன்றத்தில் ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றது.
இதற்கு முன்னர் 13 சீர்திருதத்தம் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பின்னர்தான் கிழக்கு மாகாணசபை ஆட்சி முறையொன்று கொண்டுவரப்பட்டது.
13வது சீர்திருத்தம் வந்ததற்கு பின்னர்தான் தமிழ்ரகளாகிய நாங்கள் பெரும் இழப்புக்களை சந்தித்திருக்கின்றோம். இலங்கை இந்திய படைகளின் அட்டூழியங்களுக்கு எதிராக அன்னை பூபதி கடந்த 27 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பு அமிர்தகழி
மாமாங்கப்பள்ளையார் ஆலயத்தில் தமது உயிர் தன்னைவிட்டு பிரியும் வரை தமிழ் மக்களுக்கான தீர்வினை பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உயிர் நீத்தார்.
இவருடன் நின்று விடாமல் தியாகி திலீபனும் எமது மக்களுக்காக இறுதி மூச்சு வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். இவர்களது தியாகங்களை தமிழர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் மதிக்கவேண்டும். நாங்கள் மதிக்கின்றபோதுதான் எமது
வரலாற்றுச்சான்றுகளாக ஆவணப்படுத்தப்படும். அவ்வாறு ஆவணப்படுத்தப்படும் வேளையில் எமது இளைய தலைமுறை எமது கடந்தகாலங்களைப்பற்றி அறியக்கூடியதாக இருக்கும் என உரையாற்றினார்.
போடா சீனா உமக்கு வைப்பான் பெரிய ஆப்பு.
இந்தியா செய்த துரோகம் மன்னிக்க முடியாது.இந்தியா சிங்களவனின் நண்பனாக தான் செயல்படுகிறது.