உடைக்கப்படும் வீடுகள் சித்திரவதைக்கூடங்களா? அதிர்ச்சியில் மீள்குடியேறிய மக்கள்!!

kadduvanஇலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றினில் சித்திரவதைக்கூடங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுவருகின்றது.

யாழ்.குடாநாட்டினில் மட்டும் அது படையினரால் கைப்பற்றப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி முதல் தற்போது வரை காணாமல் போயிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இன்று வரை தகவலற்றேயிருக்கின்றது. மஹிந்த ஆட்சிக்காலத்திலும் முன்னதாக சந்திரிகா ஆட்சிகாலத்திலுமென மூவாயிரத்து ஜநூறிற்கும் அதிகமான இளைஞர்,யுவதிகள் இவ்வாறு காணாமல் போயிருந்தபோதிலும் இன்று வரை அவர்கள் பற்றி தகவல்களும் இல்லாதேயுள்ளது.

காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.பின்னர் அவர்களிற்கு என்ன நடந்ததென்பது தெரியாதேயுள்ளது.

ஆனாலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களினிலிருந்த மக்கள் வீடுகளினில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுள் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பின்னரே கொல்லப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையினில் அண்மை நாட்களாக விடுவிக்கப்படும் மக்களது காணிகளினில் பெருமபாலும் வீடுகள் உடைக்கப்பட்டேயுள்ளன.அவ்வாறாயின் அவை தடுப்பு முகாம்களாகவோ சித்திரவiதைக்கூடங்களாகவோ இருந்திருக்க முடியுமென சந்தேகிக்கப்படுகின்றது.
உயர்பாதுகாப்பு வலயம் இன்று வரை விடுவிக்கப்படாத ஒரு புதிராகவே இருக்கின்றது.பல கட்டடங்கள் அண்மையினில் இடிக்கப்பட்டமை சந்தேகத்தை தருகின்றது.

-http://www.pathivu.com

TAGS: