யாழ்.குடாநாடு குழு மோதல்களினால் அதிர்கின்ற நிலையினில் சட்டம் ஒழுங்கை வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் சூடுபிடித்துவருகின்றது.
இன்று மதியம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒருபுறம் நீதி வேண்டி போராட்டமொன்றை நடத்தியுள்ள நிலையினில்வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த செந்தூரனின் கொலைக்கான குற்றவாளிகளைக்கைதுசெய்து பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
திக்கம் நாவலடி சந்தியில் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “கொலைகும்பல் நீண்டகாலமாக சுதந்திரமாக இயங்கிவருகின்றது” , “இவர்களை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை”, “அப்பாவிகளை கொலைசெய்யும் இவர்களை பொலிஸார் உடன் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்”, “பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டு” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதே வேளை பொலிஸாரின் பாதுகாப்புடன் செந்தூரனின் இறுதி கிரியைகள் இன்று நடைபெற்றன.
-http://www.pathivu.com



























தமிழன் எங்கே இருந்தாலும் வெட்டும் கொலையும் தான் ,
என்றுதான் நமக்கு விடிவோ? ஏன் நம்மவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக நடக்கின்றனர்?