காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகள் தம் பிள்ளைகளை வெலிக்கடை பூசா முதலான முகாம்களில் தேட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்குள் தொடர்பிலான அமைச்சர் ஜோன் அமரதுங்க இன்று தெரிவித்தார். இந்த அறிவிப்பின் பிரகாரம் காணாமல் போனவர்களைத் தேடுபவர்கள், தம் உறவுகள் வெலிக்கடை மற்றும் பூசா சிறைகளில் இருப்பதாக சந்தேகப்பட்டால், அதற்கான ஆதாரங்கள் இருப்பின் அந்த சிறைச்சாலைகளுக்கு சென்று தேட முடியும்.
காணாமல் போனவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றமைக்கான ஆதாரங்கள் தெளிவாகக் காணப்படுவதாகவும், அவர்களைப் பார்வையிட உறவினர்களுக்கு அனுமதி வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னரே இவ்வாறானதொரு முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது.
-http://www.pathivu.com

























