ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை! வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

northern_provincial_councilஆந்திர மாநிலத்தில் தமிழர்கள்  சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாதத்தின்  இரண்டாம் வாரத்தில்  இந்தியா ஆந்திரமாநிலம்  திருப்பதிக்கு அருகில்  20 தமிழர்கள் செம்மரக் கடத்தலுடன்  தொடர்புள்ளவர்கள் என்று கூறி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

சம்பவம்  தொடர்பில்  இன்று நடைபெற்று வரும் 28 ஆவது வடக்கு மாகாண சபையின்  மாதாந்த கூட்டத்தில்  வடக்கு முதல்வரால்  சபையில்  எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த செயற்பாட்டிற்கு கண்டன தீர்மானமும்  நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் க.வி. விக்கினேஸ்வரன் ,

20 தமிழர்கள்  எதுவித விசாரணையும்  இன்றி சுட்டுக்கொலை செய்யப்பட்டதனால்  அங்கு தொடர் பதட்டம் நிலவியது. அத்துடன்  இவர்கள்  தமிழர்கள்  என்ற காரணத்தினால்  தானா விசாரணைகள்  மேற்கொள்ளப்படவில்லை என்றும்  சந்தேகிக்கம் எழுகின்றது.

இந்த செயற்பாடு கடந்த காலங்களில்  இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களை நினைவுபடுத்துகின்றது. எனவே இவ்வாறான செயற்பாட்டினை அப்பாவி  தமிழ் மக்கள்  மீது மிலேச்சைத்தனமான மனித உரிமை மீறல் செயற்பாட்டிற்கு வடக்கு மாகாண சபை கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

அத்துடன்  கொல்லப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு அனுதாபங்களைத்தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும்  அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் என்றும்  அவர்  மேலும் தெரிவித்தார்.

அதே போல்  நேபாளத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் இறந்த மக்களுக்கு வடக்கு மாகாண சபையில்  அஞ்சலி  செலுத்தப்படட்டது.

வடக்கு மாகாண சபையின்  28 ஆவது மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டட தொகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் அவைத்தலைவர்  சீ.வி.கே சிவஞானம்  தலைமையில் ஆரம்பமாகியது.

சபை அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் கடந்த வாரம் நேபாள நாட்டில்  இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பல ஆயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டி வடக்கு மாகாண சபையில் அனைவரும் ஏகமனதாக இறந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் நேபாள நாட்டில் இறந்த மக்களது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் இரங்கலும் தெரிவித்து வடக்கு முதல்வர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.pathivu.com

TAGS: