யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயற்படுமாறு அமெரிக்கா, இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான உண்மை கண்டறியப்பட வேண்டியது அவசியமானது என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்வதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது எனவும் இலங்கை அமெரிக்காவின் நட்பு நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சொத்துக்கள் மோசடி செய்யப்பட்டமை சொத்துக் குவிப்பு தொடர்பில் உதவிகளை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்களுக்கு தொழில்நுட்ப சார் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்துடன் மிக நெருக்கமான உறவுகள் பேணப்படாத போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்டதனை அமெரிக்கா வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
உலகின் எந்தவொரு நாடும் மிகத் துல்லியமான மனித உரிமைகளை பேணுவதில்லை எனவும், அமெரிக்காவிலும் அதே நிலைமையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளை இலங்கை விஜயத்தை முடித்துக் கொள்ளுமுன் ஜோன் கெரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.
-http://www.tamilcnnlk.com