இலங்கையின் நல்லாட்சிக்கு 19வது திருத்தம் ஒரு முக்கியமான படியாகும்!- சுமந்திரன் பா.உ.

SumanthiranTNAஇலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்ப மிக முக்கியமான கட்டமே 19வது திருத்தமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவி;ல் நேற்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி ஒன்றை ஒரே இரவுக்குள் ஸ்தாபித்துவிட முடியாது. எனினும் தாம் ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய உறுதிமொழியை ஜனாதிபதி சிறிசேன நடைமுறைப்படுத்தி வருவது வரவேற்கத்தக்க விடயமாகும்.

இதில் 19வது திருத்தமும் ஒன்றாகும். 19வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் வெற்றி கொள்ள செய்வதற்கான முக்கிய இறுதிக் குழுவில் சுமந்திரன் இடம்பெற்றிருந்தார்.

இது தொடர்பில் ஏற்பட்டிருந்த பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அமைத்த குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒப்புதலை ஜனாதிபதியினால் 11வது மணித்தியாலத்தில் பெற்றுக்கொள்ளமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: