அமெரிக்காவிடம் இருந்து இலங்கை எவ்வித அழுத்தங்களையும் எதிர்கொள்ளவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
இலங்கை வந்திருந்த அமரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை பொறுத்தவரையில் இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் நிலைநாட்டுவதே நோக்கமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தம்முடனான சந்திப்பின் போது தெளிவாக வெளிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையுடனான அமெரிக்காவின் உறவு குறித்து அவர் எவ்வித சந்தேகத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
-http://www.tamilwin.com
அமெரிக்க மட்டுமல்ல உலக நாடுகளே எங்கள் பக்கம்தான்.