தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பின் தங்கிய கிராமமான நொச்சிக்குளம், சாந்திபுரம், அவ்வை நகர் போன்ற பகுதிகளுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.
அக்கலந்துரையாடலின் போது பல வருடங்களாக மீள் குடியமர்த்தப்பட்டும் இருப்பதற்கு இருப்பிடம் கூட இன்னும் வழங்கப்படவில்லை எனவும் தாம் யுத்தத்துக்கு முன்னர் விவசாயம் செய்து வந்த காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் களவாடப்பட்டுள்ளதாகவும் தமக்கு விவசாய நிலங்களை பெற்று தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் கூடிய விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கும் எனவும் புதிய அரசாங்கம் இப்படியான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை காணப்படுவதாகவும் இரா.சம்பந்தன் மக்கள் மத்தியில் தெரிவித்தார்.
இதே வேளை சாந்திபுரம் துர்க்கையம்மன் கோயிலுக்கு ஐந்து இலட்சம் ரூபாவினை நிர்மானப் பணிகளுக்காக தருவதாகவும், நொச்சிக்குளம் பிள்ளையார் கோயிலுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நிர்மானப்பணிகளுக்காக வழங்குவதாகவும் கூடிய விரைவில் கும்பாபிசேகம் செய்யுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோயில் நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இன்னும் சில மாதங்கள் பொறுமையாக இருக்குமாறும் நல்ல எதிர்காலம் மைத்திரி அரசாங்கத்தில் உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
-http://www.tamilcnnlk.com