தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் நேற்று முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து தீபமேற்றும் நிகழ்வொன்றை நடத்தியுள்ளார்.
இதன்போது, நேற்று தொடக்கம் எதிர்வரும் ஒருவாரத்திற்கு உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்கான காலமாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இது குறித்து அவர் தகவல் தெரிவிக்கையில்;
“உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்காக தீபமேற்றப்படுவதாக நேற்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று பேரை சந்திக்க கிடைத்தது.
இதன்போது, தமது உறவினர்களும் யுத்தத்தில் உயிரிழந்தமை காரணமாக அவர்களுக்காக ஒரேயொரு தீபத்தை ஏற்றியதாக அவர் கூறினார்.
தற்போது வரை கிடைத்த தகவல் அதுதான். ஒற்றையாட்சிக்குள் விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்து இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முடியாது.
அவ்வாறுசெய்தால் அது சட்டவிரோதமானது. எதிர்வரும் 18 ஆம் திகதியும் இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெறலாம் என காவல்துறையினர் அவதானமாக செயற்பட்டுவருகின்றனர்” என்றார்.
-http://www.pathivu.com
அப்படி போடு தலைவா! விடுதலை புலியின் வாடைகூட (காற்று) சிங்களவன் மண்ணில் வீசக்கூடாது.இது நம் மண்.தமிழன் எல்லாம் நமது அடிமை.அது அவனின் தலை எழுத்து.வாழ்க சிங்களம்.