வடமாகாண சபையினால் மாவீரர் குடும்பங்கள், புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள்,மற்றும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவியளிக்கும் செயற்றிட்டம் 43மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இவ்வுதவி வழங்கும் செயற்றிட்டம் எதிர்வரும் 7 ஆம் மாதம் அளவில் நடமுறைக்குக் கொண்டுவரப்படும். இதுவரையில் 13 ஆயிரம் விண்ணப்பப்படிவங்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பப் படிவங்களை அனுப்பிவைத்த குடும்பங்களுக்கான உதவிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.sankathi24.com

























