இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம்!- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

rudrakumaaranபுலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் இல்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமைக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதிலளித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னர் புலம்பெயர்வாளர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் ஆர்;ப்பாட்டம் நடத்தினர்.

எனினும் தற்போது அவ்வாறான செய்தியைக் காண முடியவில்லை என்று அமைச்சர் ராஜித குறிப்பிட்டிருந்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான சுதன்ராஜ் தமது கருத்தில், ஜனாதிபதி மைத்திரிபால லண்டனுக்கு வந்திருந்த போதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையை சுட்டிக்காட்டினார்.

அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சர்வதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதன் ஒருகட்டமாக எதிர்வரும் 18ம் திகதியன்று நியூயோர்க்கில் நடைபெறவுள்ள நிகழ்வில் அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்ஸி கிளார்க் உரையாற்றவிருப்பதாகவும் சுதன்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: