முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 9.30அளவினில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர்.
உயிரிழந்த மக்களை நினைவு கூர தடையில்லையெனவும் எனினும் தடை செய்யப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்களை நினைவு கூர அனுமதியில்லையெனவும் வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுமதி தொடர்பினில் தொடர்பு கொண்ட வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரியவிக்கப்படுகின்ற நிலையினில் முல்லைதீவு பொலிஸார் இன்றிரவு வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் தடை உத்தரவு கடிதத்தை அவரது வீட்டினில் வைத்து கையளித்துள்ளனர்.
எனினும் தான் உத்தியோகபூர்வமாக எந்தவொரு விண்ணப்பத்தையும் நினைவேந்தல் தொடர்பினில் செய்திருக்காத நிலையினில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் தடைவிதிக்க வேண்டும் என முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட விண்ணப்பத்தின் பிரகாரம் முல்லைதீவு நீதிமன்றினால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடிதமொன்றை சமர்ப்பித்திருப்பதாக ரவிகரன் தெரிவித்தார்.
-http://www.pathivu.com