உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இடமளிக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் இருந்து வரும் தகவல்களின் படி,
இறுதிக்கட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் பொதுமக்கள் தடையின்றி ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
போரில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூரும் நிழக்வுகளுக்கு பொலிஸாரும் படையினரும் தடைவிதிப்பதாக பொதுமக்கள் சிலர் முறையிட்டுள்ளதாகவும்,
உயிரிழந்தவர்களை நினைவு கூருவது ஜனநாயக உரிமை ஆகவே மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க கூடாதெனவும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு இடமளிக்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அழைத்து அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் கூறியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த மாதம் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை உயிரிழந்த விடுதலைப் புலி போராளிகளை நினைவுகூர முடியாது என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com