வடக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இறுதிப்போர் இடம்பெற்ற பிரதேசமான முள்ளிவாய்க்காலில் தமிழ் சிவில் சமுகம், மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது.
.நினைவேந்தல் முற்பகல் 10.30 மணிக்கு சுடரை முதலமைச்சர் கவி விக்கினேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதைத் தொடந்து வடமாகாண சபை உறுப்பினர்களும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து தமது உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகள் சுடங்களை கண்ணீர்மல்ல ஏற்றினர். கொடுந்துயரை அனுபதித்த உணர்வோடும், உறவுகளின் இழப்பினால் ஏற்பட்ட கனத்தோடும் கூடிய மக்களது கண்ணீர் வெள்ளத்தில் முள்ளிவாய்க்கால் இன்று சோகமாகியது.
அத்துடன் உயிரிழந்தவர்களுக்கான சமயக் கிரியைகளும் இடம்பெற்றன.
-http://www.tamilwin.com