நீதிமன்றின் உத்தரவுகளை மீறி வடக்கின் பல இடங்களில் வெற்றிகரமாக புலி நினைவேந்தல் நிகழ்வுகள்

may18_jaffna_002நீதிமன்றின் உத்தரவுகளை மீறி வடக்கின் பல இடங்களில் வெற்றிகரமாக தமிழீழ விடுதலைப் புலி நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை மீறி வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள் முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் விளக்கு ஏற்றியுள்ளனர்.

இ;ந்த நிகழ்வில் பங்கேற்குமாறு வடக்கு முதல் அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் விளக்கு ஏற்றி புலிகளை நினைவு கூர்ந்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூஜை வழிபாடுகள் மே;றகொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வாளகத்தினுள் கறுப்பு கொடி ஏற்றப்பட்டிருந்ததாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை கொலை செய்தமை குறித்து சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரும் பெனர் ஒன்றும் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகத்தில் புலிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை, பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத் தலைவர் இராசகுமாரன் வழிநடத்தியுள்ளார்.

மட்டக்களப்பு வாகரை பகுதிகளிலும் நினைவேந்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: