விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூறும் வகையிலான நினைவஞ்சலி நிகழ்வுகள் எவையும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைக் கூறியுள்ளார்.
தெற்கில் யுத்த வெற்றி கொண்டாடப்படும் போது, வடக்கில் விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூறும் நிகழ்வுகள் இடம்பெறுவதாக மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தி இருந்தார்.
அத்துடன் இவற்றுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள அஜித் பீ பெரேரா, ஊழல் மிகுந்த அரசாங்கத்தின் உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ, தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாங்கள் நாமல் ராஜபக்ஷ கூறும் விடயங்களை பெரிதுப்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளார்.
-http://www.pathivu.com

























