இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்?

பிமா ராவ் : கோமாளி, இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்?

கோமாளி : பீமாராவ், கோயில் யானை மண்டி போட்டு சலாம் போடுவதை பார்த்திருப்பாய். யானை ஒரு பலசாலியான மிருகம், அது பாகன் கொடுக்கும் ஒரு வாழைப்பழத்திற்காக ஏன் சலாம் போடுகிறது. சுதந்திரமாக காட்டில் சுற்றித் திரியும் யானையை பிடிக்க குழி பொறியை பயன்படுத்துவர். குழிபொறி என்பது காண இயலாத தோண்டப்பட்ட பெரிய குழியாகும். விரட்டப்படும் யானைகளில் ஏதாவது ஒன்று அதில் விழுந்துவிடும். அதனால் தப்பிக்க இயலாது, குழியின் உள்ளேயே முட்டி மோதி கதறும். சில நாட்களில் சோர்வடைந்துவிடும். பிறகு சிறிதளவு தீனி போடுவார்கள். மீண்டும் முட்டி மோதி கதறும். ஒன்றும் போட மாட்டார்கள். சோர்வடைந்து அமைதியான போது மீண்டும் தீனி கிடைக்கும்.

இப்படியாக சிலமுறை நடந்த பிறகு யானையின் நடைமுறையில் அமைதியாக இருக்கும்போதுதான் தீனி கிடைக்கும் என்ற “பழக்கம்” அதன் மூலையில் உருவாக்கப்படும்.

இதேபோல் முதலில் வலுவான சங்கிலியால் பிணைக்கப்பட்டு யானைக்கு தீனி போடாமாட்டார்கள். அது பிளிரும், ஓடும் ஆனால் எதுவும் செய்ய இயலாது. பலமுறைகள் இப்படியே நடந்த பிறகு என்ன செய்தாலும் கட்டப்பட்ட நிலையில் தப்பிக்க இயலாது என்ற “பழக்கம்” அதன் மூலையில் உருவாக, அமைதியாக இருந்தால்தான் தீனி கிடைக்கும் என்ற “பழக்கம்” அதன் மூலையில் பதிவாகும். இப்படித்தான் யானை பழக்கப்படும்.

பீமாராவ், பலம் மிகுந்த யானைக்கு எங்கே பலத்த அடி விழுந்தது என்றால் என்ன சொல்லுவீர்கள்?