யாழ்ப்பாண நகரில ஆர்ப்பாட்டங்களை நடத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவித்துள்ளது.
காவற்துறையினரின் விண்ணப்பத்துக்கு இணங்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை தலைமையகம் தெரிவத்துள்ளது.
இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி இயக்கம் – மானிப்பாய் மற்றும் ராஜினி தலைமையிலான பெண்கள் இயக்கம் – கொக்குவில் ஆகிய தரப்புக்கு இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் கவச வாகனத்தில் அதிரடிப்படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 130 பேர் கைது செய்யப்பட்டிருந்தமையின் அடிப்படையிலேயே இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-http://www.pathivu.com

























