போர்க்களத்தில் ஒரு பூ! இசைப்பிரியா தொடர்பான திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை

porkalathil_oru_poo_001இலங்கையின் இறுதிப்போரில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு இந்திய திரைப்பட மத்தியக்குழு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

அண்டை நாடுகளுடன் நட்புரிமை உறவு என்ற அடிப்படையிலேயே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என்று திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே கணேசன் தெரிவித்துள்ளார்.

நட்பு நாடு என்ற அடிப்படையில் அணுகாது தமிழக அரசாங்கமே இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமை வியப்பானது என்று கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமையை நடிகரும் திரைப்பட தணிக்கை குழுவின் பிராந்திய தலைவருமான எஸ்.வி.சேகர் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் படுகொலைகள் இடம்பெறுகின்ற போது அவற்றை திரைப்படமாக காட்ட அனுமதியில்லை. இது திரைப்பட தணிக்கை நூலில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக சேகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: