தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க போர் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வரவேற்பதாகவும் போர் நடைபெற்ற நேரத்தில் இராணுவ தளபதியாக பணியாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தள்ளார்.
த காடியன் செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 26 வருட யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தின் தளபதியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா செயற்பட்டார்.
இலங்கை அரசாங்கத்தினாலும், தமிழீழ விடுதலை புலிகளினாலும் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து, ஐ.நா மனித உரிமைகள் குழு அறிக்கை வெளியிட்டிருந்தன.
சரத் பொன்சேகாவின் கட்டளைகளின் கீழ் இவ்வாறான பாரிய குற்றங்கள் இடம்பெற்றதாக அதிர்ச்சியூட்டும் காணொளிகள் வெளியாகின.
போரின் போது நிகழ்ந்த சில குற்றங்களை ஏற்றுக்கொண்டாலும், தனிப்பட்ட செயல் முறையான குற்றங்களை பொன்சேகா மேற்கொள்ளவில்லை என வலியுறுத்துகின்றார்.
ஒட்டுமொத்த இராணுவமும் மேற்கொண்டது தான், நாங்கள் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளவில்லை என உத்தரவாதம் கொடுக்க முடியாதென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது எனது கட்டளையின் கீழ் எவ்வித சித்திரவதைகளோ, வன்புணர்வுகளோ இடம்பெறவில்லை.
அங்கு சில குற்றச்சாட்டுகள் உள்ளன என்று எனக்குத் தெரியும். ஆனாலும் ஊடகங்களுக்கு எதிராகவோ அல்லது சர்வதேச சமூகத்திற்கு எதிராகவோ போர் பிரகடன முயற்சிகள் இடம்பெறவில்லை என்பதனை எங்களால் தெளிவுபடுத்த முடியும்.
பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கு அவர் ஒரு போர் வீரன் எனினும் மற்றவர்களுக்கு அவர் ஒரு போர்க் குற்றவாளி, அரசாங்கம் அவரது மனசாட்சி சுத்தமானதென வலியுறுத்துகிறது.
எனது எண்ணங்கள் தெளிவாக உள்ளது. நான் அனைத்தையும் நல்ல நம்பிக்கையிலே செய்தேன் என்கிறார் சரத் பொன்சேகா.
நாட்டின் இறைமை மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதே எனது வேலை.
நான் அதை செய்ய வேண்டும். எனது விதிமுறைகளின் படி செய்தேன் எனவும் பொன்சேகா கூறுகின்றார்.
2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு சரத் பொன்சேகா தோல்வியுற்றார்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சர்வாதிகாரி போன்று செயற்பட்டார் என இலங்கையின் தலைநகர் கொழும்பில் வைத்து சர்வதேச ஊடகத்திடம் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
ராஜபக்சாக்களின் நடத்தை இந்நாடு எற்றுக்கொள்ளும் படி இருக்கவில்லை, குறிப்பாக போர் முடிந்த பின்னர் எனவும் பீல்ட் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், அவரது முழு குடும்பம், அவரது பிள்ளைகள், அவரது மனைவி என அனைவரும் நாட்டின் அரசர் போன்று நடந்து கொள்ளவே முயற்சித்தார்கள். அவர்கள் சர்வாதிகள் போன்று செயற்பட்டார்கள்.
இவ்வாறான காரணங்களினாலே நான் அவரை விட்டு விலகினேன், நான் அவரை விட்டு விலகியிருக்க வேண்டும் என எண்ணினேன்.
இதனையடுத்தே முன்னாள் ஜனாதிபதியின் தொந்தரவுகள் ஆரம்பித்தன. அவரால் எங்களை மிரட்டி, பயங்கரத்துக்குள்ளாக்கவும், அமைதியாக்கவும் முடியும் என அவர் நினைத்தார் எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவின் இராணுவ தரங்களையும், பதவிகளையும் ராஜபக்ச பறித்துக்கொண்டார்.
அதற்கு அடுத்த ஆண்டு ராஜபக்சவின் சகோதரர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவில் பொன்சேகா சிறைக்கு அனுப்பப்பட்டார்.
யுத்தத்தின் போது எவ்வித தவறுகளும் இடம்பெறவில்லை என ராஜபக்சவினர் மறுத்தார்கள்.
இரண்டு முறை தொடர் வெற்றிகளின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2015ஆம் ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சிவில் சமூகம் மற்றும் அரசியல் ஆளுமையினால் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்த தோல்வியுற்றார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன வெற்றி வேட்பாளரானார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, செல்வாக்கு மிக்க பௌத்த பிக்குகள், மற்றும் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையின தலைவர்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கினார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியின் பின்னால் தேசிய மத மற்றும் இன குழுக்களின் ஆதரவு காணப்பட்டன.
புதிய ஜனாதிபதி 100 நாட்களுக்குள் பரவலான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவதாக வாக்குறுதி வழங்கினார்.
ஜனாதிபதி அதிகாரங்களை பாராளமன்றத்திற்கு வழங்குவது உட்பட பல அவரது வாக்குறுதியாக காணப்பட்டன.
உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் அறிக்கைகளை வெளியிடுவதற்கு தாமதமானதற்கு காரணம் புதிய நிர்வாகத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நேரம் வழங்கப்பட்டது.
இலங்கையில் அனைத்துலக விசாரணைகளையும் அனுமதிக்க வேண்டும் என நீண்ட அழைப்புகள் வந்தன. எனினும் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளுக்கு மாத்திரம் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.
விசாரணைகள் ஜீன் மாதம் இடம்பெறும் என கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது மக்களின் கவனத்திற்குக் கூட சில சாதகமான முன்னேற்றங்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ளதாக கண்கானிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மனித உரிமைகள் குறித்த கவலைகள் இலங்கை பாராளுமன்றத்தில் உட்பட காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
புதிய அரசாங்கம் வலுவற்ற இரு கட்சியின் அரசியல் சமரசத்தின் விளைவினால் ஒரு நுட்பமான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியில் ஆதரவை தக்கவைத்துக் கொண்டு, அதிகாரத்திற்கு வர உதவிய சிறுபான்மையினரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முயற்சித்து வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற போதிலும், அவருடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மற்றவர்களின் மீது ஊழல் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொது தேர்தலில் தேசியவாத்தின் பெரும் அலையாய சிங்களவர்களின் ஆதரவில் பிரதமராக முயற்சித்து வருகின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குற்றவற்றவர் என நிரூபனமாகி சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாக உயர்த்தப்பட்டார்.
இனியும் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவே எனக்கு எவ்வித என்னமும் இல்லை என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்கு விடைகொடுக்க ஆயத்தமாகவே உள்ளேன்.
ஜனாதிபதி, பிரதமராவது எனது இலட்சியமல்ல, ஆனால் நாட்டை சரியான பாதையில் எடுத்துச்செல்வேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொனசேகா உறுதியளித்துள்ளார்.
-http://www.tamilwin.com