யார் என்ன சொன்னாலும் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புப் படையினர் இந்த நாட்டின் ஓர் அங்கமாகும்.
வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் படையினர் கடமையாற்றி வருகின்றனர்.
இவ்வாறான ஓர் நிலையில் வடக்கிலிருந்து மட்டும் இராணுவத்தை அகற்றிக் கொள்வது எந்த வகையிலும் செய்யக் கூடியதல்ல.
வடக்கில் படையினர் கடமைகளை தொடர்ந்தம் ஆற்றுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com


























நன்று,