பரந்தனில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சமூக குற்றங்களை களையும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.
கூட்டமைப்பு பா.உ. சி.சிறிதரன் தலைமையில் மாகாண கல்வி அமைச்சர், கி,ளிநொச்சி பிரதேச பொலிஸ் அதிகாரி, கரைச்சி பிரதேசசபை உபதலைவர், கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி, பிரசைகள் குழு உறுப்பினர், மனிதஉரிமைகள் அமைப்பினர், கிராமசேவகர், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமிய அமைப்பினர் மற்றும் நூற்றுகணக்கான மக்கள் பங்களிப்புடன் இன்று மாலை 4:30 மணியளவில் கிளி ஆனையிறவு அ சி த க பாடசாலையில் இடம்பெற்றது.
கூட்டமைப்பு பா.உ. சி.சிறிதரன் கருத்து தெரிவிக்கையில்,
பாலியல் குற்றங்கள் கனகராயன் குளம், புங்குடுதீவு சிவபுரம், நாரந்தனை என தொடர்கதையாக தொடர்வதை கடுமையாக கண்டடித்ததுடன் இவ்வாறான சம்பவங்கள் அதிகாரமிழந்ந சமூகவிரோத குழுக்களின் திட்டமிட்ட இனவழிப்பாக உள்ளதாக சந்தேகம் வெளியிட்டார். அத்துடன் சட்டத்தை கையிலெடுக்காமல் பொலிஸாருடன் இணைந்து சமூகவிரோத சக்திகளை களையெடுப்பதற்கான பலமான கிராமமட்ட அமைப்பினை முன்மொழிந்தார்.
இவ் அமைப்பில் சி.சிறிதரன், இரண்டு பொலிஸர், மற்றும் ஆறு ஆண் உறுப்பினர்களையும், மூன்று பெண் உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இவ் அமைப்பு பிரதேசத்தில் இடம்பெறும் சமூகவிரோத நடவடிக்கைகளை இனம்கண்டு சட்டத்தின் முன் கொண்டுவர பொலிஸாருக்கு உதவவுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில் அதிகாரமிழந்ந சமூகவிரோத குழுக்களினால் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாகவும் இதுவே குற்றங்களுக்கு காரணமாக அமைவதாகவும் தெரிவித்தார்.
முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதில்லை எனவும் தற்போது இவை தினசரி நடைபெறுவதையும் சுட்டிக்காட்டியதுடன் இவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
இங்கு கருத்து தெரிவித்த வடமாகாண கல்வி அமைச்சர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புடன் செயற்படுமாறும் கைத்தொலைபேசி பாவனையை கவனிப்புடன் கையாளவும் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்களை மீண்டும் இணைக்கவேண்டும் எனவும் கல்வியே சமுதாய மாற்றத்திற்கு அவசியம் எனவும் தெரிவித்தார்.
மேலும் கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
பட்டப்பகலில் முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்ற துஸ்பிரயோகம் பயங்கரமான செயல் எனவும் இவ்வாறான சம்பவங்களுக்கு பெற்றோர் அசட்டையாக இருப்பதும் ஒருகாரணம் என தெரிவித்தார்.
மேற்படி துஸ்பிரயோக சம்பவம் 26ம் திகதி பாடசாலை முடிந்து சிறுமி வீடு செல்லும்போது 16 வயதையுடைய சந்தேகநபர் 7 வயது சிறுமியை மலசலகூடததினுள் இழுத்துச்சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் பாடசாலை முடிந்து ஒன்றரை மணிநேரம் கழித்தே சிறுமி வீடுசென்று தாயாரிடம் சம்பவத்தை தெரிவித்ததாகவும் அதன்பின்னர் பொலிஸாருக்கு அறிவித்தபின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
பொலிஸார் தெரிவிக்கையில் 16 வயது சந்தேகநபர் ஒருவரை கைது செய்து இன்று 28 நீதிமன்றில் முற்படுத்தியதாகவும் சந்தேகநபர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்ட்டதாகவும் விரைவில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்தனர்.
ஊர்மக்கள் தெரிவிக்கையில் சந்தேகநபருடைய தந்தை இறந்தபின் தாயார் மறுமணம் புரிந்ததாகவும் அதன் பின் சித்தியுடன் வசித்து வந்ததாகவும் அண்மையில் அங்கிருந்தும் வெளியேறி போதை பழக்கத்துக்கும் அடிமையானதாகவும் வன்புணர்வின் பின் தனது ஆடைகளை நண்பர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்ததாகவும் பின்னர் பொலிஸாரால் அவ் உடையை ஆதாரமாக மீட்கப்ட்டதாகவும் தெரிவித்தனர்.