வடக்கில் ஒவ்வொரு தாயும் தமது பிள்ளைகளின் சீரழிவுகளைப் பார்த்து சிந்தும் இரத்தக் கண்ணீர் ராஜபக்சவின் குடும்பத்தை சும்மாவிடாது. ஒவ்வொரு தாயும் வடிக்கும் இரத்தக் கண்ணீர் இவர்களுக்கு சாபமாக அமைவது நிச்சயமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தி இன்று அது விஸ்வரூபமாகி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யும் நிலை ஏற்படுவதற்கான பொறுப்பை மஹிந்த ராஜபக்சவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
“வடக்கின் வசந்தம்” என்ற பெயரில் ராஜபக்ச குடும்பம் திட்டமிட்டு தமிழர் கலாசாரத்தைச் சீரழித்துள்ளது. அந்தப் பாவத்திற்கான சம்பளத்தை இறைவன் வழங்குவான். அது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடித்து விட்டோம், தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்துவிட்டோம், வடக்குத் தமிழ் மக்களின் விடிவை வழங்கியவர்கள் நாமே என மார்தட்டிய மஹிந்த ராஜபக்சவும், அவரது குடும்பமும், அரசும் மறுபுறம் தமிழர்களின் சமூக கலாசாரத்தை திட்டமிட்டு சீர்குலைத்தன.
“வடக்கின் வசந்தம்” என்ற பெயரில் அங்கு தாராளமாக பியர் போத்தல்களையும் மதுபான போத்தல்களையும் கொள்கலன்களில் அனுப்பி வைத்து புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கினார்கள்.
இளைஞர்களையும் யுவதிகளையும் நல்வழிப்படுத்துகிறோம். மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றோம் என்ற போர்வையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி போதைப் பொருட்களை விநியோகித்தனர்.
உல்லாசப் பயணிகளுக்காக ஹோட்டல்களைத் திறக்கின்றோம் என்ற பெயரில் அந்த ஹோட்டல்களுக்குள் விபசார விடுதிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
சிறப்பான ஒழுக்கத்தைக் கொண்டிருந்த வடபகுதி தமிழ் மக்களின் வாழ்க்கையில் இவ்வாறு சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தி மஹிந்த ராஜபக்ச தமிழர்களைப் பழிவாங்கினார்.
இன்று மஹிந்த ராஜபக்சவின் பழிவாங்கல் விஸ்வரூபமெடுத்துள்ளது.
“வடக்கின் வசந்தம்” என்ற பெயரில் தமிழ்ச் சமூகத்தை சீரழித்த ராஜபக்ச குடும்பமும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கிய தமிழர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளையும் மக்கள் ஓரங்கட்ட வேண்டும்.
-http://www.tamilwin.com


























தளபதி பிரபாகரன் ஆட்சியில் ஈழத்தில் தமிழ் கலாசாரம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.அதனால் பலருக்கும் இயற்கையாகவே இனமான உணர்வு இருந்தது.அன்னாரின் மறைவுக்குப் பிறகு ஈழ கலாச்சாரமும் மறைந்துவிட்டது.சிங்களவன் தமிழ் நாட்டு கலாசாரத்தை அங்கு புகுத்தி விட்டான்.இருப்பினும் இன்னும் காலங் கடந்துவிடவில்லை.வடமாகாண அரசு தன்னிச்சையாக மதுவிலக்கு சட்டத்தை நிறைவேற்றி ஈழத்தை கலாசார சீரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
ஈழத்தில் மழை விட்டாலும் து வானம் விடவில்லை என்ற நிலையாகி விட்டது அப்பாவி மக்களின் சாபம் ஒருநாள் விஸ்வரூபம் எடுக்கும் !