மீனவர் விவகாரத்தில் சிறிலங்கா தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட கருத்துக்களால், இந்தியா கடும் சீற்றமடைந்துள்ளதுடன், இதுகுறித்து சிறிலங்காவுக்கு இராஜதந்திர முறைப்படி கவலையைத் தெரிவிக்கவுள்ளது.
புதுடெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மீனவர் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா தரப்பில் இருந்து வெளியாகும் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் குறித்து, இந்தியா கவலையைப் பரிமாறத் திட்டமிட்டுள்ளது.
இந்த அறிக்கைகள் இந்த விவகாரத்தில் பேச்சுக்கான சூழலை பாழாக்கி விடும்.
மீனவர் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்காக இந்தியா முன்வைத்த யோசனையை சிறிலங்கா நிராகரித்து விட்டது.
நாம் இதனை ஒரு வாழ்வாதாரப் பிரச்சினையாகப் பார்க்கிறோம்.
அவர்களின் மீனவர்கள் எமது கடற்பகுதிக்கு வந்து மீன்பிடிக்கிறார்கள். எமது மீனவர்கள் அவர்களின் கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கிறார்கள். அப்போது அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
இது ஒரு வாழ்வாதாரப் பிரச்சினை, வேறு வழிகளில் அன்றி மனிதாபிமான அடிப்படையில் தான் இதற்குத் தீர்வு காண வேண்டும், என்று அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டியுள்ளது.
சிறிலங்கா தரப்பில் இருந்து பெரிய அறிக்கைகள் வருகின்றன. அவற்றில் சில மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளன.
எனவே இத்தகைய ஆத்திரமூட்டும் கருத்துக்கள் பேச்சுக்காள சூழலைப் பாழ்படுத்தி விடும் என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்தவுள்ளோம்.
இனிமேல் எந்தப் பேச்சுக்களும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை மையப்படுத்தியே இடம்பெறும், மனிதாபிமான அடிப்படையில் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஆண்டுக்கு 65 நாட்கள், சிறிலங்கா கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும்படி, இந்தியா முன்வைத்த யோசனையை கொழும்பு நிராகரித்து விட்டதாக சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
65 நாட்கள் இல்லை, 65 மணி நரம் கூட அவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-http://www.pathivu.com


























முதன்முதலில் தமிழ் நாட்டுக்கே உரியதான கச்சத்தீவை மீட்கவேண்டும் .அது தமிழர்களின் உணர்வை மதிக்காமல் வடநாட்டவர்களால் தாரைவார்க்கப்பட்டது .
தமிழரகளுக்கு இங்தியா ஆதரவாக நடந்தால் நாங்கள் சீனாவின் உதவியை நாடுவோம்.
தமிழர்களுக்காக்கவும்.தமிழுக்கும்
பலமுறை தீக்குளித்து சாகாத வடுகன்
ஆட்சியின் பொது இந்தராவுக்கு
எதிர்ப்பு தெரிவிக்காமல் தனது
ஊழலுக்கு கச்சத்திவு பலியானது.
அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்களே ,
இன்னும்…, இன்னும் …, எத்தனை ஆண்டுகள் இதே பல்லவியை பாடிக்
கொண்டிருக்கப் போகிறீர்கள் ?
உங்களிடம் ராணுவம் இல்லையா …?வீர …நெஞ்சில் உரம் கொண்ட
வீரர்கள் இல்லையா ???
தினம் தினம் இந்த மீனவர் பிரச்னை …ஒப்பாரி …ஓலம் , இந்த அவலம்
இன்னும் தொடர வேண்டுமா ?
அரசியல் வழி தீர்வு இல்லையேல் …இந்திரா வங்கம் மீது தொடர்ந்த
போர் …, மறந்து விடாதீர்கள் !!!
உங்கள் பிரதமர் உலகம் சுற்றலாம் …, கொஞ்சம் விவேகம் வேண்டும் ,
துணிவு வேண்டும் .
காலம் காலமாக மூட மக்கள் கூட்ட தலைவனாக இருந்து வசவு
பெற்று போவதை விடுத்து ஆக்க பூர்வ காரியமாற்ற முனையுங்கள் !
அசிங்க அரசியல் உங்களுக்கு பெரும் பழி சேர்க்கும் ,அந்திம காலத்தில் ஆண்டவனை நாடாதீர்கள் ???
உங்கள் கையாலாகா தலைமையை அல்லல் படும் ஏழைகள் விடும் சாபம் கட்டாயம் …சேரும் !
சீனா அவர்களுக்கு சாவி கொடுக்கிறது.