புங்குடுதீவில் வித்யா என்கிற அப்பாவி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்குப் பின் கொலையும் செய்யப்பட்ட கொடுமையான செய்தியைப் படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது முதலில்! அடுத்த நொடியே அச்சம் எழுந்தது. ஒரு திட்டமிட்ட நாடகத்தின் முதல் காட்சியோ – என்கிற அச்சம். அது, நமது எதிரிகள் வஞ்சகர்கள் மட்டுமல்ல… நயவஞ்சகர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் அவதானித்திருப்பதால் எழுந்த அச்சம். அடுத்தடுத்து அரங்கேறிய காட்சிகள் அந்த அச்சத்தை உறுதி செய்வதாக இருந்தன.
வித்யாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமையில் சம்பந்தப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதற்காக அவர்களை மன்னித்துவிட முடியுமா என்ன? சிங்கள மிருகங்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும். எந்த மொழியில் பேசினாலும் மிருகம் மிருகம்தானே! அதனால்தான், குற்றவாளிகளைத் தூக்கில் போடு – என்கிற கோபக்குரலுடன் வீதிகளில் திரண்டார்கள் ஈழத்து மாணவர்கள்.
வித்யாவுக்கு நீதி கேட்டு நடந்த அறவழிப் போராட்டங்களைத் திசை திருப்பும் விதத்தில், வன்முறையைத் தூண்டிவிட தீவிர முயற்சிகள் நடந்தன. முதல்வர் விக்னேஸ்வரன் அதைக் கடுமையாகக் கண்டித்ததிலிருந்து, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், அந்த நாடகத்தின் சூத்திரதாரிகள் யாராக இருக்கக்கூடும் என்பதையெல்லாம் ஊகிக்க முடிந்தது.
இன்றைக்கு சிங்களப் பகுதிகளிலெல்லாம் வித்யாவுக்காக போராட்டங்கள் நடத்தப்படுவதைப் பார்க்கிறபோது, இந்த நாடகம் நன்றாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு இனப்படுகொலையின்போது, பாலியல் பலாத்காரத்தை ஆயுதமாகவே பயன்படுத்திய பௌத்தப் பொறுக்கிகள் மீதான சர்வதேசத்தின் பார்வையைத் திசை திருப்ப, திட்டமிட்டு இதையெல்லாம் செய்கிறார்களோ என்கிற அச்சம் வலுத்து வருகிறது. யாரையோ காப்பாற்றுவதற்காக யாரோ நடத்தும் ஒரு நாடகத்துக்காக, ஒரு அப்பாவித் தமிழ்மகள் பலிகொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறபோது, நெஞ்சு கொதிக்கிறது.
இந்தக் கேவலமான நாடகத்தின் பின்னணிக் கதையை மட்டும் சொன்னால் போதும்…. மற்றதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
வன்னி மண்ணில், 2009 மே மாதம் வரை தொடர்ந்த இனப்படுகொலையின்போது, பௌத்த சிங்களப் பொறுக்கிகளின் கொடுமையான ஆயுதங்களில் ஒன்றாக பாலியல் வன்முறையும் பயன்படுத்தப்பட்டது என்பது மிக மிக வலுவான குற்றச்சாட்டு. அது போகிற போக்கில் சொல்லப்படுகிற குற்றச்சாட்டு அல்ல என்பது விரைவில் நிரூபணமானது. ஆவணப்பட இயக்குநர் கல்லம் மேக்ரேவிலிருந்து, கிரெனெடா நாட்டின் மனித உரிமைப் போராளியான கறுப்பினச் சகோதரி கிமாலி பிலிப் வரை பலரும் இந்தக் குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் எழுப்பினர்.
(சிங்கள மிருகங்களின் திட்டமிட்ட பாலியல் பலாத்காரம் குறித்து பிரிட்டிஷ் பத்திரிகையாளர் பிரான்சேஸ் ஹாரிசன் எழுதியுள்ள நெஞ்சை உலுக்கும் கட்டுரையின் மிகச்சில பகுதிகளைத்தான் சென்ற இதழில் பார்த்தோம். முழுமையாக அதைத் தமிழில் தருவதற்கான மனோதிடம் எனக்கும் இல்லை.)
எங்கள் குழந்தையான 13 வயது புனிதவதிக்கும், எங்கள் தங்கை இசைப்பிரியாவுக்கும் என்ன நடந்ததோ, அதுதான் எண்ணற்ற சகோதரிகளுக்கு நடந்தது வன்னியில்! மிக மிகக் கொடுமையான பாலியல் வன்முறையை ஒரு நாட்டின் ராணுவமே திட்டமிட்டு நடத்தியது அதுதான் முதல்முறை. ஈழத்திலிருந்த ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஊடுருவியிருந்த சுதந்திர வேட்கையைச் சிதைப்பதற்காகவே, பாலியல் வன்முறையைப் பயன்படுத்தியது சிங்கள ராணுவம். தமிழ்ச் சகோதரிகளின் மன உறுதியைக் குலைப்பதே அதன் முதல் முக்கிய நோக்கம்.
இசைப்பிரியா குறித்த திரைப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் கணேசன் சொல்வதுமாதிரி, இன அழிப்பையே நோக்கமாகக் கொண்ட அந்தப் போர்க்களத்துக்கு இடையே ஒரு பூ மாதிரிதான் நகர்ந்துகொண்டிருந்தாள் இசைப்பிரியா. அந்த மென்மையான மலரைப் பிய்த்து எறிந்தது கூட திட்டமிடப்பட்டதுதான். அது, மற்ற தமிழ்ப் பெண்களுக்கு சிங்கள மிருகங்கள் விடுத்த பகிரங்க எச்சரிக்கை. ‘என்ன வேண்டுமானாலும் செய்வோம் தெரியுமா’ என்பது அந்த மிருகங்களின் வெளிப்படையான சவால்.
இனத் துவேஷத்துடன் இதை எழுதவில்லை நான். ஒரே தீவுதான் என்றாலும், அங்கே இருவேறு தேசிய இனங்கள் இருந்தன, இருக்கின்றன. இருவேறு கலாசாரங்கள் இருக்கின்றன. அதில், பழம் பண்புகளைப் போற்றும் இனமாக இன்றுவரை இருப்பது தமிழினம்தான்! சிங்கத்தைப் பார்த்ததும் உடல் சிலிர்த்து உடலுறவு கொண்ட இன்னொரு இனம் குறித்து பேசுவது நமக்கு வேண்டாத வேலை.
பழம் பண்புகளைப் போற்றி, திருமண உறவுகள் மற்றும் குடும்ப வாழ்வியல் நெறிகளைப் போற்றி, மனிதவாழ்வின் மாண்புகளைப் போற்றிய எமது தமிழினத்தின் வாழ்வியல் கம்பீரத்தைச் சிதைக்க, எம் சகோதரிகளை மனோரீதியாகச் சித்திரவதை செய்வதுதான் சிங்கள மிருகங்களின் திட்டம். பிரான்சேஸ் ஹாரிசன் சொல்வதைப்போல், குழந்தையைக் காட்டி மிரட்டி தாயை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் ராணுவப் பொறுக்கித்தனத்துக்கு இதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?
இசைப்பிரியாவுக்கு என்ன நடந்ததென்பதை மேக்ரே அம்பலப்படுத்தியவுடன், ஒட்டுமொத்த இலங்கையும், அவமானத்தோடு கூனிக்குறுகி நின்றிருக்க வேண்டும். அதற்கு நேர்மாறாக, மேக்ரேவை அவமானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியது இலங்கை. பௌத்தப் பொறுக்கித்தனம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை அதன்மூலம் பாரதிரப் பறைசாற்றினார்கள் புத்தனின் புத்திரர்கள்.
மேக்ரே வெளியிட்ட வீடியோ ஆதாரத்தில், இசைப்பிரியாவுக்கு அருகிலிருக்கும் ஒரு சிப்பாயின் முகம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அந்த மிருகத்தின்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது – என்கிற கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை. மகிந்த ராஜபக்சே மாதிரியே மைத்திரிபாலா சிறிசேனாவுக்கும், அந்த மிருகம் உள்ளிட்ட அனைத்து மிருகங்களையும் காப்பாற்றும் எண்ணம்தான் இருக்கிறது இன்றுவரை!
இவ்வளவு ஆதாரங்கள் வெளியானபிறகும், “ஒரே ஒரு ‘ரேப்’ கூட நடக்கவில்லை, எங்கள் சிப்பாய்கள் அப்படிப்பட்டவர்களில்லை” என்று வாரம் ஒரு அறிக்கை வெளியிட முடிகிறது சரத் பொன்சேகாவால்! குற்றமிழைத்த ராணுவப் பொறுக்கிகளுக்குச் சாதகமாகப் பேசி, அவர்களின் ஆதரவுடன், குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தை இன்னும் கைவிடவில்லை பொன்சேகா. குறுக்குவழியில் அதிகாரத்தைக் கைப்பற்றி விடும் பொன்சேகாவின் திட்டத்தைப் புரிந்துகொண்டுதான், அந்த மிருகத்தைச் சிறைக்குள்ளேயே வைத்திருந்தது மகிந்த மிருகம். இப்போது, மகிந்தனைச் சமாளிக்க அந்த மிருகத்தை அவிழ்த்து விட்டிருக்கிறது மைத்திரி அரசு.
ராஜபக்சேவோ, மைத்திரியோ, பொன்சேகாவோ இன்றுவரை, போரின் பெயரால் சீரழிக்கப்பட்ட எம் சகோதரிகளுக்காக ஒரு வார்த்தை பேசவில்லை. இசைப்பிரியா தொடர்பான வீடியோவைப் பார்த்து தன்னுடைய குழந்தைகள் அதிர்ந்துபோனதாகச் சொன்ன சந்திரிகா, அதிபர் மைத்திரி குடியிருக்கும் அலரி மாளிகையின் தற்காலிகத் திருஷ்டி பொம்மை. தொம்மை மாதிரி இருக்கிறது அந்தப் பொம்மை…… மூச்சு பேச்சே இல்லை.
சிங்களத் தலைவர்களை விடுங்கள்….
எம் நாட்டின் ராணுவம் இவ்வளவு கீழ்த்தரமானதா – என்று சிங்கள மக்களிடமிருந்து ஒற்றை வார்த்தைக் கண்டனமாவது இதுவரை வெளிவந்ததுண்டா? ஆயிரக்கணக்கான தமிழ்ச் சகோதரிகள் திட்டமிட்ட ஒரு பாலியல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டபோது பேசாத அந்த இனம், இன்று இலங்கை முழுக்க புங்குடுதீவு சம்பவத்துக்காகப் பேரணி நடத்துகிறதே…. அரசியல் பின்னணி இல்லாமல் வேறெது இதன் பின்னணி?
சிங்கள ராணுவப் பொறுக்கிகள் மீதான பாலியல் வன்முறைப் புகார்கள், இன்றில்லாவிட்டாலும் நாளையோ நாளை மறுநாளோ உலக அரங்கில் இலங்கையைக் கொண்டுவந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் என்பது நிச்சயம். அந்தக் குற்றச்சாட்டை நீர்த்துப் போக வைப்பதற்காகவே, புங்குடுதீவு சம்பவத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுபோக முயற்சி நடக்கிறது. ‘இலங்கையில இதெல்லாம் சகஜம்’ என்பது மாதிரியான ஒரு தோற்றத்தை உருவாக்க முயலும் எவரையும் நாம் மன்னிக்கக் கூடாது. சிங்களர்கள் வேண்டுமானால் இதை சகஜமாக எடுத்துக் கொள்ளலாம்…. தமிழர்கள் அப்படி எடுத்துக் கொள்ள முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்தாக வேண்டும்.
முதலிலேயே சொன்னதைப்போல், எந்த மொழி பேசினாலும் மிருகங்கள் மிருகங்கள் தான். அவற்றை மன்னிப்பதென்ற பேச்சுக்கே இடமில்லை. எம் குழந்தை வித்யாவைச் சீரழித்த மிருகங்களைத் தூக்கிலிடுகிற அதே தூக்குக் கயிற்றின் மறு நுனியில் எங்கள் சகோதரி இசைப்பிரியாவைச் சீரழித்த மிருகங்களும் தூக்கிலிடப்பட்டாக வேண்டும்.
வித்யாவுக்காக நீதிகேட்ட ஈழத்து மாணவர்கள் ஏந்தியிருந்த பதாகை ஒன்று, எங்கள் தாய்மண்ணின் உணர்வை அச்சுஅசலாக அப்படியே வெளிப்படுத்தியது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்கு மாதிரி, நறுக்குத் தெறித்தாற் போல் நான்கே நான்கு வார்த்தைகள்தான் இருந்தன அதில்!
“இருப்பவர்கள் இருந்தால்
இப்படி நடக்குமா”
இதுதான் அந்தப் பதாகையிலிருந்த வாசகம். மிகமிக எளிய வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்தாலும், இதைக்காட்டிலும் வலுவான வாசகம் வேறெதுவும் இருக்க முடியாது. நாலைந்து ஆண்டுகளாக தொடர்ந்து எழுதுகிற இந்தப் புகழேந்தியால், அந்தக் குழந்தைகள் எழுதிப் பிடித்திருந்த அந்த வாசகத்தில் ஒரே ஒரு வார்த்தையைக் கூட எழுதிவிட முடியாது என்பதை பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன். நான் வார்த்தைகளை எழுதுகிறேன், எங்கள் ஈழத்து மாணவச் செல்வங்களோ, வாழ்க்கையை எழுதுகிறார்கள்.
அவர்கள் எழுதியிருக்கிற நான்கே நான்கு வார்த்தைகளை வைத்து, நானோ ச.ச.முத்துவோ 40 கட்டுரையாவது எழுத இயலும். அந்த அளவுக்குப் பொருள் பொதிந்திருக்கிறது அந்த வார்த்தைகளில்! என்றாலும் ரத்தினச் சுருக்கமாக ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன். இருப்பவர்கள் – என்பதற்கு ‘உயிரோடிருப்பவர்கள்’ என்பதைத் தவிர வேறு அர்த்தம் எதுவும் இருக்க முடியாது. ‘இருந்தால்’ என்பதற்கு, ‘இங்கே இருந்தால்’ என்பதுதான் பொருள். இந்த விளக்கத்துடன் அந்த வாசகத்தைப் படித்துப் பாருங்கள். ‘உயிருடன் இருக்கும் எங்கள் அண்ணைகள் இந்த நேரத்தில் ஈழத்தில் இருந்தால், இதைப் போன்ற சம்பவங்கள் நடக்குமா’ என்பதுதான் அந்த இளம் மாணவர்கள் கேட்கிற கேள்வி.
அந்த அண்ணன்களின் தம்பிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழீழப் பகுதிகளில் இப்படியெல்லாம் கொடுமையான குற்றங்கள் எப்போதாவது நிகழ்ந்ததுண்டா? விடுதலைப் புலிகளின் காவல்துறை மற்றும் நீதித்துறையின் மாட்சிக்கு இதுதானே சாட்சியாக இருந்தது.
தமிழீழத்துக்குச் சென்றுவந்தபிறகு, எங்கள் இயக்குநர் பாரதிராஜா சொன்னது இப்போதுகூட நினைவிருக்கிறது எனக்கு! ‘விடுதலைப் புலிகளின் போர்க்கள வெற்றிகளைக் காட்டிலும் பெரியது, எமது மக்களின் மனங்களை அவர்கள் வென்றிருப்பது. அவர்களது போர்த் திறனைக் காட்டிலும் சிறப்புவாய்ந்தது, அவர்களது நிர்வாகத் திறன்’ என்று மனம்திறந்து பாராட்டினார் பாரதிராஜா.
பாரதிராஜா சொன்னது அப்பழுக்கில்லாத உண்மை. புலிகளின் நிர்வாகத் திறன், வன்னி மக்களுக்கு வலுவான பாதுகாப்பை வழங்கியிருந்தது. பின்னிரவு நேரங்களில் கூட எந்த அச்சமுமின்றி வீதிகளில் நடந்தோ சைக்கிளிலோ செல்லும் குடும்பங்களைப் பார்த்து, பாரதிராஜாவைப் போலவே நானும் வியந்திருக்கிறேன். ராமராஜ்யம் – என்பது வெறும் கற்பனையல்ல என்பதை நிரூபித்தவர்கள் புலிகள். ராமராஜ்யம் முக்கியமல்ல, ராமருக்குக் கோயில் கட்டுவதுதான் முக்கியம் – என்று செங்கல்லோடு திரியும் நமக்கு இதையெல்லாம் புரிந்துகொள்வது இயலாத காரியம் என்று நினைக்கிறேன்.
தங்கள் தாய்மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் நேசித்த பிரபாகரனாலும் அவனது தோழர்களாலும், குற்றங்கள் தவிர்த்த முன்மாதிரி மண்ணாக மலர்ந்தது எங்கள் தமிழீழம். அந்த ஈழத்தில்தான் இன்று புங்குடுத் தீவு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இசைப்பிரியா போன்ற ஆயிரமாயிரம் சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி, எம் இனத்தின் சுதந்திர தாகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்காகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதி. சர்வதேசத்தின் பார்வையிலிருந்து அந்த அநீதியின் கொடுமையைத் திசை திருப்புவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் அநீதி – வித்யாவுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி.
எங்கள் மாவீரர்களால் அங்குலம் அங்குலமாகச் செதுக்கப்பட்ட எங்கள் தமிழீழ மண், இன்று பௌத்தப் பொறுக்கிகளால் அணு அணுவாகச் சிதைக்கப்படுகிறது. தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும், பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் பழக்கத்தை விதைக்கும் வேலை திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது. இது எனது குற்றச்சாட்டு அல்ல, ‘யாழ் மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டுக் குழு’ வெளிப்படையாகவே இதைத் தெரிவித்திருக்கிறது. பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமைகளாக மாற்றுகிற வேலை இது – என்பது அதன் புகார். சிங்கள மிருகங்களுக்கு இணையாக தமிழ் மிருகங்களை வளர்த்தெடுக்கிற முயற்சியல்லாமல் இது வேறென்ன?
காவல்துறை அதிகாரத்தை விக்னேஸ்வரனுக்குக் கொடுத்துவிட்டால், தமிழீழத்தில் போதைப் பொருளைப் பரப்ப முடியுமா பொறுக்கிகளால்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வருக்கு அந்த அதிகாரத்தைத் தர இலங்கை அரசு எதனால் மறுக்கிறது என்பது இப்போது தெரிகிறதா? இசைப்பிரியாக்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுப்பதற்காகத்தான் வித்யாக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்கிற சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
-http://www.sankathi24.com