வடக்கில் போதைவஸ்து பாவனை திட்டமிட்டு அறிமுகப்படுத்தப்படுவதாக மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே இதற்கு எதிராக இளைஞர்கள் எழுச்சிப் பெறவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர்,
தமிழ் இளைஞர்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சில அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இளைஞர்கள் மத்தியில் விடுதலை வேட்கை வந்துவிடக்கூடாது என்று விரும்பும் அமைச்சர்கள், இளைஞர்கள் ரோபோக்களை போன்று இயக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கங்களின் நடவடிக்கை காரணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திபோராடினர்.
எனினும் அந்தப்போராட்டம் வெளிநாடுகளின் பாரிய உதவிகளுடன் முடிவுறுதப்பட்டது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-http://www.tamilwin.com