ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நபர்கள்: துடிதுடிக்க கொன்ற ஐ.எஸ்

isis-india2ஈராக்கில் 100 அடி உயர மாடியில் இருந்து ஓரினச்சேர்க்கையாளர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கீழே தள்ளி கொலை செய்துள்ளனர்.

ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்கு பெண்களின் ஆடை விடயத்தை கண்காணிக்கவும், தாடி வளர்க்காத ஆண்களை பிடித்து தண்டிக்கவும் தனி காவல் படையை அமைத்துள்ளனர்.

அதேபோன்று, அங்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களை பிடிக்கும் இந்த ஒழுக்கக் கண்காணிப்பு காவல் படையினர், அவர்களை உயரமான கட்டிடங்களில் இருந்து கீழே தள்ளி துடிதுடிக்க பொதுமக்கள் முன்னிலையில் கொன்றுவருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் மூன்று ஓரினச்சேர்க்கையாளர்களை பிடித்து, சுமார் 100 அடி உயரமுள்ள பெரிய கட்டிடத்தில் இருந்து கீழே தள்ளி தண்டனை விதிக்கும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com

https://youtu.be/n2s_0D6Yex4

TAGS: