நியாயம் கிடைக்காவிடின் ஜெனீவா சென்று தீ வைத்துக் கொள்வேன்!- அனந்தி எச்சரிக்கை

anandhi-04தற்போதைய அரசாங்கம் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உரிய நியாயம் பெற்றுக் கொடுக்காவிடின் தான் ஜெனீவா சென்று உடலுக்கு நெருப்பு வைத்துக் கொள்ளப் போவதாக அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது கணவர் எழிலன், அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி தொலைபேசியில் அழைத்து கூறிய பின்னரே இராணுவத்திடம் சரணடைந்ததாக எழிலனின் மனைவி, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

விசேட செவ்வியொன்றை வழங்கிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் தனக்கும் தனது மக்களுக்கும் உரிய நியாயம் பெற்றுக் கொடுக்காவிடின் தான் ஜெனீவா சென்று உடலுக்கு நெருப்பு வைத்துக் கொள்ளப் போவதாக அனந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இம்மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை கவுன்ஸ்லி கூட்டத்திலும் எதிர்காலக் கூட்டங்களிலும் அனந்தி கலந்து கொள்ளவுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான அவர், தான் இறந்த பின் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது பிள்ளைகளுக்கு கற்பித்து வருவதாகக் கூறியுள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதி வாரத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: