கருணாநிதியும், கனிமொழியும் மௌனம் கலைய வேண்டும்: அனந்தி சசிதரன் வேண்டுகோள்

ananthi_sashitharanதமது கணவரை சரணடைய உத்தரவாதம் வழங்கியமை தொடர்பில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ராஜ்யசபை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தமது மௌனத்தை கலைத்து பதில் கூறவேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரியுள்ளார்.

2009 மே 16ஆம் திகதியன்று இரவு 8 மணியளவில் தமது கணவர், கனிமொழியுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினார். இதன் போது கருணாநிதியின் சார்பில் கனிமொழி தமது கணவர் எழிலனை சரணடையுமாறும் விடுதலைக்கான முனைப்புக்கள் சர்வதேச ரீதியில் எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.

இதனையடுத்தே இலங்கைப்படையினரிடம் சரணடைய தமது கணவர் முடிவெடுத்ததாக அனந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதனை பல தடவைகள் தாம் கூறியுள்ள போதிலும் கலைஞர் கருணாநிதி அல்லது கனிமொழி தரப்பில் இருந்து பதில் ஏதும் வரவில்லை என்று சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கருணாநிதி ஐயாவும், கனிமொழியும் தமது மௌனம் கலைந்து இறுதிப்போருக்கு பின்னால் இருந்து செயற்பட்டவர்களை வெளிக்காட்ட வேண்டும் என்று அனந்தி கேட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: