20 வருடங்களுக்கு முன் கொலைச்சம்பவத்துடன் மகிந்தவுக்கு தொடர்பு: அம்பலப்படுத்திய மைத்திரி !

maithrirajapakseமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக அம்பாந்தோட்டையில் கொலைச் சம்பவமொன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியிருப்பதாக சமூக சேவைகள்,நலன்புரி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச கொலைச் சம்பவமொன்றில் சந்தேகநபராக இருந்ததாக ஜனாதிபதி சிறிசேன தன்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியிருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருப்பதாக கொழும்புகசற் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி சிறிசேன சாட்சியொன்றாக இருந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதை நான் ஊடகங்களுக்கு தெரிவிக்கலாமா? என்று ஜனாதிபதியிடம் கேட்டேன் அவரும் ஆம் என்றார், என்று ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டையிலுள்ள அனைவருக்கும் அதேபோல் ஐ.தே.கவின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும் கூட மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டு பற்றித்தெரியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் முன்வரும் பட்சத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கை மீண்டும் ஆரம்பிக்கு முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் மூடப்பட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பில் புதிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் தேவையேற்படும் பட்சத்தில் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கும் விசாரிக்கப்படும் என்றும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

-http://www.athirvu.com

TAGS: