இலங்கையில் இருந்து புறப்பட்ட 54 தமிழர்கள் இந்தோனேசியாவுக்கு வந்திருக்கிறார்கள், அங்கேயும் வாழப் பிடிமானம் இல்லாமல் போனதால் அங்கிருந்து நியூசிலாந்துக்குக் கடல் மார்க்கமாக புறப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் நிறுவுனர் சீமான் இன்று இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.
கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இருக்கிறார்களே என்று கூட எண்ணாமல், அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள்.
அவர்களின் படகுகளை பறித்துக்கொண்டு சுங்கத்துறை படகுக்கு ஏதிலிகளை மாற்றி இருக்கிறார்கள்.
இந்தோனேசியாவில் உள்ள தீமோர் தீவில் படகு ஒதுங்க, இப்போது எந்த வசதியும் இல்லாமல் அல்லலுறுகின்றனர்.
தீமோர் தீவில் தவிக்கும் ஏதிலிகளைக் காப்பாற்ற உலகத்தின் ஜனநாயக சக்திகள் உடனடியாகக் குரல் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசிய அரசு அவர்களின் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
எண்ணியபடியே அவர்கள் நியூசிலாந்து செல்ல இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் மனசாட்சியோடு முயற்சி எடுக்க வேண்டும்.
தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசின் மூலமாகத் தமிழக அரசும் முயற்சி எடுக்க வேண்டும்.
நாடோடிகளாக அலையும் ஏதிலிகளின் விடிவுக்கு உலக சமூகம் உடனடியாக ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com


























அவர்கள் வந்தாரை வாழவைப்பார்கள் என்று நாமே கற்பனை செய்து கொள்ளக்கூடாது. சும்மா நானும் அறிக்கை விட்டேன் என்பதைவிட உங்களைப் போலவே அனுதாபம் உள்ள மற்றவர்களையும் சேர்த்துக் கொண்டு மாநில/மத்திய அரசாங்கத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும். ஒவ்வொருவரும் தனித் தனியாக அறிக்கை விடுவதால் எந்தப் பயனும் இல்லை!