காயமடைந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடும் எதிர்ப்பு

munnal_poralikal_0காயமடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் காயமடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நட்ட ஈடு வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரமொன்றை சில அமைச்சர்கள் முன்வைத்தனர்.

எனினும், இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன்ää யோசனை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கோரினேன்.

புலம்பெயர் மக்களுக்கான விழாவினையும் எமது கட்சி கடுமையான எதிர்க்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் இனவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கும்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன.

தமிழ் புலம்பெயர் சமூகம் ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டை ஏற்று;ககொள்ள வேண்டுமென சம்பிக்க ரணவக்க இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: