போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் போன்ற ஒருவரை இராணுவ பணியாளர்களின் தலைமை அதிகாரியாக நியமித்தன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் கௌரவத்தை குறைத்து கொண்டுள்ளதாக அமெரிக்க செனட் உறுப்பினர் பெட்ரிக் லீஹி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட் சபையின் நீதி ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் இலங்கை சம்பந்தமாக சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் ஜனநாயகம் தொடர்பில் மேற்கொண்டுள்ள பல முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ள அவர், மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜகத் டயஸ் போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இராணுவ பணியாளர்களின் தலைமை அதிகாரியாக நியமித்தமை போன்றவை நடந்திருக்கக் கூடாது என அறிக்கையில் லீஹி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கை மேற்கொள்ள உள்ள உள்நாட்டு விசாரணைகளை ஜெனீவா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியான பின்னர் ஆரம்பிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.pathivu.com

























