சிறிலங்காவின் இந்துக்களின் சனத்தொகை 3 சதவீதத்தால் வீழ்ச்சி – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

sachi vivek03சிறிலங்காவில் இந்துக்களின் சனத்தொகை கடந்த இரண்டு தசாப்தங்களில் 3 சதவீதத்தால் குறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்து எழுத்தாளரும், ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் முன்னாள் பணியாளருமான மறவன்புலவு கணபதிபிள்ளை க. சச்சிதானந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் – கோவா – போண்டா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் பல்வேறு துன்புறுத்தல்களால் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் சிறிலங்காவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

இதனை தவிர்க்க முடியாதிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தனித்து இந்து தேசம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: