ஆனந்தி சசிதரன் அவர்கள், தனது கணவர் சரணடைவதில் தி.மு.க மற்றும் கனிமொழி ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று ஒரு கருத்தை தெரிவித்து குண்டு ஒன்றை தூக்கிப் போட்டார். இதன் பின்னணியில் கூட ஒரு மர்மம் இருக்கிறது என்று பலராலும் பேசப்படும் இன் நிலையில் , நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைவு குறித்து தன்னோடு பேசப்படவில்லை என்று இந்தியாவில் உள்ள டுபாக்கூர் “காஸ்பர்” தெரிவித்துள்ளார். இலங்கை அரசானது தற்போதுவெளிநாட்டில் உள்ள சில தமிழர்களோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி வருகிறது. அதுபோக , அதற்கு கிளம்பியுள்ள சில எதிர்புகளை சமாளிக்க சில ஊடகங்கள் ,நடந்து முடிந்த சம்பவங்களை மீண்டும் கிண்டி எடுத்து திசை திருப்பல் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
மே 18 வரை விடுதலைப் புலிகள் ஒரு தீர்க்கமான முடிவில் தான் இருந்தார்கள். இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றதுபலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அனைவராலும் அறியப்படும் கேணல் சங்கர் அவர்களின் மனைவி குகா அக்கா, 2009 ஏப்பிரல் மாதம் இறுதி வாரத்தில் லண்டனில் உள்ள தனது நண்பி ஒருவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். சட்டலைட் தொலைபேசியூடாக பேசிய அவர் , தான் தலைவர்(பிரபாகரன்) அவர்களோடு தங்கியிருப்பதாகவும். அவர் இருக்கும் பங்கருக்கு அருகாமையில் தான் தானும் இருப்பதாகவும் தெளிவாகக் கூறியுள்ளார். ஆயுதம் ஏந்தாத அரசியல் போராளிகள் , புலிகளின் நிர்வாக சேவை பிரிவினர் என்று சில பிரிவில் உள்ளவர்கள் வேண்டும் என்றல் சரணடையலாம். ஆனால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். முற்றுகையை உடைத்து வெளியேற முடியுமா என்று முயல்வோம் என்று தேசிய தலைவர் கூறியுள்ளதாக குகா அக்கா மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.
யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர விடுதலைப் புலிகளின் தலைமை , இறுதி நேரத்தில் பல முயற்சிகளை எடுத்தது உண்மையே. ஆனால் மே 16 நடக்கவிருந்த இந்திய பொதுத் தேர்தலை கணக்கில் கொண்ட காங்கிரஸ் அரசு, ஆயுதங்களை கீழே போடுங்கள் அனைவரும் சரணடையுங்கள். யுத்த நிறுத்ததிற்கு நாங்கள் பொறுப்பு என்று கூறினார்கள். ஆனால் புலிகளோ , யாராவது ஒரு மேற்குலக நாட்டின் (அதாவது 3 வது ஒரு நாட்டின்) தலையீடு இருக்கவேண்டும் என்றும். அவர்கள் பிரசன்னமாக இருக்கையில் நாம் சரணடையலாம் என்றும் கூறினார்கள். இதேவேளை தலைவரது பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த ரட்ணம் மாஸ்டர் உட்பட சுமார் 300 போராளிகள், ராணுவ முற்றுகையை உடைத்தே வெளியேறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இறுதிவரை இருந்தார்கள். இருப்பினும் புலிகளின் சில உயர்மட்ட உறுப்பினர்கள் வேறு ஒரு நாட்டு அனுசரணை இருந்தால் தாம் சரணடையலாம் என்று எண்ணினார்கள்.
ஆனால் மே 16ம் திகதி சரணடைந்த ப.நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட பலரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது. இது இவ்வாறு தான் நடக்கும் என்று கூட , புலிகளில் உள்ள மூத்த தளபதிகள் சிலர் எதிர்வு கூறி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக “கேணல் ஜெயம்” அவர்கள் , நடேசனை சரணடைய வேண்டாம் என்று கூட அறிவுறுத்தி இருந்தார். ஆனால் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் வகுத்த திட்டங்களே இறுதியில் நிறைவேறியது. போர் என்றால் வெற்றி தோல்வி இருப்பது சகஜம். 33 வருட போராட்டத்தில் , புலிகள் சாதிக்காத விடையமே கிடையாது எனலாம். 2ம் உலகப் போருக்கு பின்னர் ஒரு நாட்டின் , ராணுவத்தினர் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டது ஆனையிறவில் தான் என்பது ஒரு வரலாறு. இதனை எவரும் மறுக்கவோ இல்லை மறைக்கவோ முடியாது.
6க்கும் மேற்பட்ட நிலைகளில் முள்ளிவாய்க்காலை நோக்கி , மல்டி பரல் ஏவுகணைகள். அவைகளால் நிமிடத்திற்கு 1500 ஏவுகணைகளை ஏவ முடியும். 42,000 ஆயிரம் இலங்கைப் படையினர். அவர்களுக்கு உதவ கடலில் சுமார் 72 க்கும் மேற்பட்ட சிறிய ரகபோர் கப்பல்கள். அதுபோக 38 அதி நவீன மிகையொலி(supersonic) போர் விமானங்கள். 24 க்கும் மேற்பட்ட தாக்குதல் உலங்கு வானூர்திகள். 50 க்கும் மேற்பட்ட நிலைகளில் ஷல் மற்றும் ஆட்டிலறி ஷெல் ஏவுகணைகள். அதுபோக கருணாவின் ஆழ ஊடுருவும் படையணி. அதுபோக சீனா, பாக்கிஸ்தான், பிரித்தானியா , இந்தியா , ரஷ்யா கொடுத்த கனரக ஆயுதங்கள். போதாக்குறைக்கு 2 வண்டுகள்( ஆளில்லா வேவு விமானங்கள்). இவை அனைத்துக்கும் எதிராக களத்தில் சில நூறு புலி வீரர்கள். கைகளில் மிஞ்சியிருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் பிஸ்டல்கள். இவை தான் புலிகள் கைகளில் இறுதியாக இருந்தது. யாருக்கு வரும் இந்த மனத் தைரியம் ?
அமெரிக்க ராணுவ வீரர்கள் , இதுபோன்று (புலிகள் போன்று) ஒரு சிறிய பகுதியில் இன் நிலையில் மாட்டிக்கொண்டு இருந்தால் ? ஒரு நாளில் விடையம் முடிந்து அனைத்து இடங்களையும் சிங்கள ராணுவம் கைப்பற்றி இருக்கும். ஆனால் புலிகளின் மனத் தைரியம், இலங்கை ராணுவத்தை முன்னேற விடாது தடுத்தது. இன்று மே 18 தொடர்பாகவும் , புலிகள் வீழ்ச்சி தொடர்பாக வாய் கிழிய பேசிவரும் நபர்கள் எவராவது , புலிகளின் தலைவர்களை முள்ளிவாய்க்காலில் இருந்து அப்புறப்படுத்த (ESCAPE PLAN) ஏதாவது ஒரு மீட்ப்பு நடவடிக்கையில் இறங்கினார்களா ? மாலை தீவில் உள்ள , ஏர்-டாக்சி(AIR TAXI) என்று அழைக்கப்படும் கடலில் தரையிறங்கக் கூடிய விமானங்கள் சிலவற்றை வாடகைக்கு அமர்த்தி அதனை இரவோடு இரவாக நந்திக் கடல் களப்பில் , இறக்கி சில புலிகளின் தலைவர்களை மீட்டிருந்தால் இன்று போராட்டம் இப்படி கடும் வீழ்ச்சியடைந்திருக்குமா ? இறுதிப் போராட்டத்திற்காக காசு சேர்கிறோம் என்று கூறி , மே மாதம் 10 திகதிவரை கூட காசு சேர்த்த புண்ணியவான்களே …. எந்த மீட்ப்பு நடவடிக்கையை நீங்கள் மேற்கொண்டீர்கள் என்று உங்களால் கூற முடியுமா ?
மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே தான் நானும் இருப்பேன். நான் தப்பிச் செல்ல விரும்பவில்லைஎன்று பல தடவை கூறியுள்ளார் தேசிய தலைவர்.
என் எதிரியின் முற்றுகையை உடைப்பேன் என்று இறுதிவரை கூறியவர் எமது தேசிய தலைவர் பிரபாகரன். அவரே எங்கள் தலைவர் என்று கூறுவதில் என்றும் எமக்கு பெருமை தான் ! இதில் ஒரு சிறுமையும் வந்துவிடப்போவது இல்லை !
அதிர்வுக்காக
கண்ணன்.
உண்மை வெல்லும்.