மீண்டும் யாழினில் ஆயுதம் தரித்த காவல்துறை!

vavunia_police.pngயாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கண்டித்தும் அதனை தடுக்கும் வகையிலும் காவல்துறை சைக்கிள் ரோந்து சேவை எனும் பெயரினில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் பகிரங்கமாக இன்று களம் இறக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் ஓய்வுக்கு வந்திருந்த பின்னர் நிராயுதபாணியாகவே காவல்துறையினர் சேவையினில் ஈடுபடுத்தப்பட்டு வந்திருந்தனர்.அவர்கள் மீண்டும் தற்போதைய சூழலை காரணம் காட்டி ஆயுத மயப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சேவையினூடாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாகவும்,போதைப் பொருட்களை மாணவர்கள் மத்தியில் விநியோகிப்பவர்களை மறைமுகமாக கண்டுபிடிக்கவும், சட்டவிரோத மதுபான விற்பனை போன்றவற்றுடன் முக்கியமாக  வீதிகளில் செல்லும் பெண்களுக்கு இடையூறு மற்றும் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்பவர்கள் என்வர்களை கண்காணிக்கவும் குறித்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் இவ்வாறான சைக்கிள் ரோந்து சேவை மக்களுக்கு மட்டுமல்லாது பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மாணவர்கள் தமது கல்வியை இடையூறு இல்லாமல் தொடர்வதற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.pathivu.com

TAGS: